கனிமொழி பிரச்சாரத்திற்கு போகும்போது! சட்டென மறிக்கப்பட்ட வாகனம்! திடீர்ன்னு பார்த்தால்..என்னங்க இது?
தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இன்று கனிமொழி பிரச்சாரம் செய்கையில் சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இங்கே தற்போது எம்பியாக கனிமொழி உள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டு இமாலய வெற்றி அடைந்தார். அங்கே கனிமொழி 563,143 வாக்குகள் பெற்று வென்றார். அதே சமயம் தமிழிசை 215,934 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் கனிமொழி மீண்டும் இங்கே களமிறக்கப்பட்டு உள்ளார். அதிமுக சார்பாக இங்கே சிவசாமி வேலுமணி களமிறங்குகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வேட்பாளராக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
போட்டி பெரிதாக இல்லை: கடந்த முறை போல தூத்துக்குடி இந்த முறை ஸ்டார் வேட்பாளர் தொகுதி கிடையாது. ஏனென்றால் கனிமொழி மட்டுமே இங்கே பலம் வாய்ந்த வேட்பாளர். அதனால் வெற்றிக்கு அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அங்கே கனிமொழிக்கு சாதகமான சூழல் உள்ளது.
இதனால் கனிமொழியும் பெரிதாக தூத்துகுடியில் அதிகம் பிரச்சாரம் செய்யாமல் வாரத்தில் 2-3 நாட்கள் அங்கே பிரச்சாரம் செய்துவிட்டு கூட்டணி தலைவர்களுக்காக மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய களமிறங்கி உள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். அதில்., ஜோதிமணி தொடர்ந்து தமிழ்நாடு உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடி இருக்கிறார். பேசி இருக்கிறார். இதற்காக சஸ்பெண்ட் ஆகி இருக்கிறார். நடாளுமன்றத்தில் அப்படித்தான் எதிர்த்து கேள்வி கேட்டால் சஸ்பெண்ட்.
அதுவே வெளியே எதிர்த்து கேள்வி கேட்டால் ஜெயில். இங்கே கூட பாருங்கள்.. பல மாதங்களாக நமது மாவட்ட செயலாளரை உள்ளே வைத்துள்ளனர். செந்தில் பாலாஜி மீது பயம். அதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத போதும் கூட சிறையில் வைத்துள்ளனர்.
செந்தில் பாலாஜியை விட கூடாது என்று மருத்துவ காரணம் இருந்தும் கூட உள்ளே வைத்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் வெளியே விட்டுவிடுவார்கள். வெளியே வருவார். பயம் அவர்களுக்கு. அவர் இல்லாமலாவது வெற்றிபெறுவோமா என்று பார்க்கிறார்கள்.
அவர் உள்ளே இருக்கும் போதே ஒருவருக்கு கரூரில் நிற்க பயம். ( ஜோதிமணி கைதட்டி சிரிக்கிறார்) அதனால் தான் அண்ணாமலை கோயம்புத்தூருக்கு ஓடிட்டார் . செந்தில் பாலாஜி உள்ளே இருக்கும்போதே அண்ணாமலைக்கு பயம். இரண்டு தகரப்பெட்டியோடு கோவைக்கு ஓடிவிட்டார் .

நீங்கள் என்ன செய்தாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜகவிற்கு கொடுக்காதீர்கள். அவர்களுக்கு இடம் கிடைக்காது. அண்ணாமலை வாயை திறந்தால் பொய்தான். அவர் 20 ஆயிரம் புத்தகம் படித்து உள்ளீர்கள் என்று பொய் சொல்கிறார்.
ஒரு நாளைக்கு 2 புத்தகம் படித்தால்தான் 20 ஆயிரம் புத்தகம் படிக்க முடியும். பாருங்கள் எப்படி எல்லாம் அவர் பொய் சொல்கிறார் என்று. கனிமொழி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இன்று என்ன நடந்தது ?: இந்த நிலையில் இன்று தூத்துக்குடிக்கு சென்ற கனிமொழி அங்கே பிரச்சார மேடைக்கு செல்லும் போது வழியில் கிராமம் ஒன்றில் மறிக்கப்பட்டார். அவரிடம் மக்கள் எதோ கேட்க போகிறார்கள் என்று நினைத்த போது.. எல்லோரும் கூடி.. ஒரே ஒரு வார்த்தை பேசிட்டு போங்கம்மா என்றனர்.
கனிமொழி அப்படியே வியந்து கீழே இறங்க போக.. அம்மா கீழே வேண்டாம்.. வேன் மேலே இருந்தே பேசுங்க என்றனர். இதையடுத்து மேலே நின்றபடி.. உங்கள் அன்பை பார்த்து வியந்தேன். எங்கேயும் கிடைக்காத மிகப்பெரிய வரவேற்பு எனக்கு இங்கே கிடைத்தது என்றார் கனிமொழி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications