Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகத்தை கொலை செய்யக் கூடிய ஒரு முயற்சிதான் "SIR"! கனிமொழி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஜனநாயகத்தை கொலை செய்யக் கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த "SIR" இருப்பதாக தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று (07/11/2025) நடைபெற்றது.

kanimozhi dmk

இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகிவற்றை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி. வரும் நவம்பர் 11-ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் "SIR" திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது என்ற கேள்விக்கு, "SIR"யை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

உண்மையாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து "SIR"யை சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால் பீஹாரில் நாம் தெளிவாகக் பார்த்தோம்.

பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற நிலை மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பில், மக்களின் வாக்குரிமை எந்த அளவிற்கு பறிக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

நம்முடைய முதலமைச்சர் அதற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு, முதல்வர் பீகாருக்கு சென்று அங்கே நடக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு முழு ஆதரவையும் அளித்து இருக்கிறார்.

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR. அதுமட்டுமில்லாமல், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி பல பிரச்சனைகளை உருவாக்கி, வாக்காளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு சூழல் உருவாகி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்துதான் திராவிட முன்னேற்றக் கழகமும், கூட்டணி கட்சிகளும் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும்.

இந்த சமூகம் முதலில் சில விஷயங்களில் பெண்மீது பழி சுமத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்து இருக்கிறார்.

அவர்களுக்கு மிக விரைவில், அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று முழு முயற்சியோடு முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கண்டனம் தெரிவிக்க முடியும். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு என்ன கண்டனம் தெரிவிக்க முடியும்.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியை பற்றிய கேள்விக்கு; "'உடன்பிறப்பே வா' சந்திப்பின் போது நானும் உடன் இருந்தேன். வெற்றி பெறவில்லை என்றால் யாருடைய பதவியும் பறிக்கப்படும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற அறிவுரையை ஒரு கட்சித் தலைவர் வழங்குவது என்பது நிச்சயமாக தேவையான ஒன்று. வெற்றி பெற வேண்டும், அதற்காக அனைவரும் ஒருமித்து பாடுபட வேண்டும் என்று முதலமைச்சர் அனைவரிடமும் சொல்லி உள்ளார் என்று பதிலளித்தார்.

இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+