தூத்துக்குடி டூ மாலத்தீவுக்கு கடத்தல்.. நடுக்கடலில் படகில் சிக்கிய ரூ.80 கோடி போதைப்பொருள்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது.

அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு போதைப்பொருட்கள் கடல் மார்க்கமாக வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.
இருப்பினும் கூட அதிகாரிகளையும் தாண்டி சில சமயங்களில் போதைப்பொருள் கடத்தல் என்பது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தூத்துக்குடி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நடுக்கடலில் சிறியவகை கப்பல் சென்றது. அந்த கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவது தெரியவந்தது. கப்பலில் இரந்த ஹசீஸ் எனும் செறிவூட்டப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக இந்தேனசியாவை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு போதைப்பொருளை கடத்தி செல்வதும், அதன் மதிப்பு ரூ.80 கோடி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருள் எப்படி கிடைத்தது? அவர்களின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications