Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஐஎஸ் அரசு முத்திரையுடன்.. போலி தங்க நகைகள்.. "கண்டுபிடிக்கவே முடியாதாம்".. அதிர்ச்சியில் போலீஸ்

இந்த நகைகளை உரசிப் பார்த்தாலோ அல்லது இயந்திரத்தில் வைத்து பரிசோதித்தாலோ இதை போலி என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருப்பதுதான் இதில் இருக்கும் பெரிய சிக்கல்.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பிஐஎஸ் ஹால்மார்க் 916 அரசு முத்திரையுடனும், பார்ப்பதற்கு அச்சு அசலான தங்கத்தை போலவே இருக்கும் போலி தங்க நகைகளின் புழக்கம் தூத்துக்குடியில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

அரசு முத்திரை மட்டுமல்லாமல், இந்த தங்க நகைகளை உரசிப் பார்த்தாலும், இயந்திரத்தை வைத்து பரிசோதித்தாலும் இதை போலி எனக் கண்டுபிடிக்க முடியாது என்பதே இதில் பெரும் சிக்கலாக இருக்கிறது.

இதுதொடர்பாக குவிந்த புகார்களை அடுத்து, இந்த மோசடியில் ஈடுபட்டது யார், இந்த போலி தங்க நகைகள் யார் யாரிடம் விற்கப்பட்டன என்பது குறித்து தூத்துக்குடி போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

அரசு முத்திரை..

அரசு முத்திரை..

தங்கத்தில் அசல், போலியை கண்டுபிடிக்கவும், தரமான தங்கத்தை சேர்த்து செய்யப்பட்ட நகை என்பதை உறுதிப்படுத்தவுமே நகைகளில் அரசு முத்திரை வைக்கப்படுகிறது. 'பிஐஎஸ் ஹால்மார்க் 916' என்பதுதான் அந்த முத்திரை. இந்த முத்திரை பதிக்கப்பட்ட நகைகளை மக்களும் சரி, வியாபாரிகளும் சரி, எந்தவித சந்தேகமும் இல்லாமல் வாங்கிக் கொள்வார்கள். மேலும், இந்த அரசு முத்திரையுடன் கூடிய நகைகளுக்கு மட்டுமே விற்கும் போதும், அடகு வைக்கும் போதும் அன்றைய நாளுக்கான தங்கத்தின் மதிப்பில் பணம் கொடுக்கப்படும்.

லட்சக்கணக்கில் மோசடி

லட்சக்கணக்கில் மோசடி

இந்நிலையில், பார்ப்பதற்கு அச்சு அசலான தங்கத்தை போலவே, அரசு முத்திரையும் பதிக்கப்பட்ட போலி தங்க நகைகள் உலா வருவது தெரியவந்துள்ளது. முதலில், இந்த மோசடி தூத்துக்குடியில்தான் கண்டறியப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அங்கு தங்க நகை அடகுக்கடை வியாபாரிகள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதாவது கடந்த ஆண்டு தூத்துக்குடியில் உள்ள அடகுக் கடைகளில் ஒரு கும்பல் தங்க நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்று சென்றிருக்கின்றன.

"கண்டுபிடிக்க முடியாது"

ஆனால், ஓராண்டுக்கு மேல் ஆகியும் இந்த நகைகளை மீட்க யாரும் வராததால், சந்தேகமடைந்த அடகுக்கடை உரிமையாளர்கள் அந்த நகைகளை பரிசோதித்துள்ளனர். அப்பொழுதுதான் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. இதேபோல, 50-க்கும் மேற்பட்ட அடகுக்கடைகளில் இந்த போலி நகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நகைகளை உரசிப் பார்த்தாலோ அல்லது இயந்திரத்தில் வைத்து பரிசோதித்தாலோ இதை போலி என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிக நேர்த்தியாக செய்யப்பட்டிருப்பதுதான் இதில் இருக்கும் பெரிய சிக்கல் ஆகும்.

அதிரடி சோதனை

அதிரடி சோதனை

இந்த நகைகளை வெட்டி பார்த்தால் மட்டுமே இவை போலி என்பதை கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் அடகுக்கடை வியாபாரிகள். அடகுக்கடை வியாபாரிகளான தங்களாலேயே கண்டுபிடிக்க முடியாத போது, பொதுமக்களால் இதை நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது என்கின்றனர் அவர்கள். இந்நிலையில், அடகுக்கடைகளில் மட்டும் இந்த மோசடி கும்பல் கைவரிசை காட்டியதா அல்லது வங்கி, கூட்டுறவு வங்கிகளிலும் இந்த நகைகளை வைத்திருக்கிறதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இந்த விவகாரம் வெளியே தெரிந்துள்ளதால் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை சேர்ந்த அடகுக்கடைக் காரர்களும் தங்களிடம் போலி நகைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதா என சோதனை செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+