டம்மி சிஎம் ஆட்சியில்.. காவல்துறையும் டம்மி ஆகி விட்டது! மக்களை ஏமாற்றும் விஜய்! கீதா ஜீவன் சுளீர்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வில் நம்பர் ஒன்றாக இருக்கிறது. முக ஆட்சி காலத்தில் வளர்ச்சியில் நம்பர் ஒன்றாக இருந்தது. ஆளுகின்ற விஜய் அரசு விலைவாசியை குறிப்பதற்கு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், டம்மி சிஎம் ஆட்சியில் காவல்துறையும் டம்மி காவல்துறை ஆகிவிட்டது என திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிரணி சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.

Geetha Jeevan Vijay TVK

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக மருத்துவ அணித் தலைவர் அருண்குமார், தனது கழுத்தில் அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தொங்கவிட்டு, விலைவாசி உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.

கீதா ஜீவன்

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய கீதா ஜீவன்," தவெக ஆட்சியில் லஞ்சம் வாங்கப்படுகிறது. வாய்சவ்டால்
இந்த அரசு கத்தி கத்தி பேசுவது குற்றத்தை மறைப்பதற்காக எங்கு பேசினாலும் அளவுக்கு அதிகமாக சத்தத்தை வைத்து பேசுவதுமக்கள் ஆட்சிகளை குறை சொல்லி விடக்கூடாது. காய்கறி மற்றும் ஆவின் பால் உள்ளிட்ட பொருட்கள் விலைவாசி அதிகமாகி உள்ளது. தமிழக அரசு விலைவாசி உயர்வு இல்லை என்று கூறுகிறார்கள். விலைவாசி கூடியதை சும்மா சொல்கிறது திமுக என்று கூறுகிறார்கள்.

விலைவாசி உயர்வு

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வில் நம்பர் ஒன்றாக இருக்கிறது. முக ஆட்சி காலத்தில் வளர்ச்சியில் நம்பர் ஒன்றாக இருந்தது. ஆளுகின்ற விஜய் அரசு விலைவாசியை குறிப்பதற்கு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
ரேஷன் கடையில் வத்தல் மல்லி கிடைப்பதாக கூறுகிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. நிர்வாகம் சீர்கேடு நிர்வாகம் எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை.

டம்மி சிஎம்

யாராவது வசனம் எழுதி கொடுத்தால் படிக்கத் தெரிந்தவர்களுக்கு எப்படி ஆட்சி புரிய வேண்டும் என்றும் தெரியவில்லை. அமைச்சர்களுக்கும் தெரியவில்லை. காவல்துறையை எடுத்துக் கொண்டால் டம்மி சிஎம். காவல்துறையும் டம்மி காவல்துறை ஆகிவிட்டது. திமுக கனிமொழி எம்பி அறிக்கைக்கு, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் கொலை குற்றத்தை தவறாக கூறுகின்றது. சிஎம் அவர்கள் போதை ஒழிப்பு என்று ஓட்டம் பிடித்தார் அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் போதை கடத்துபவர்கள்.

மேட்டூர் அணை

போதை கடத்தல் கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்கள் அனைவருமே தவெக போர்வையில் இருக்கிறார்கள்
போதை கூடாரமாக இருக்கிறது. முதல்வர் இதை கண்டு கொள்வதில்லை இன்ப சுற்றுலா செல்கிறார் லண்டனுக்கு கார் ரேஸில் கலந்து கொள்கிறார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு 6 கோடி ரூபாய் செலவு செய்து சாலையை மறித்து பேரிகார்ட் அமைத்து அதை வைத்து விட்டு எடுப்பதற்கு ஆறு கோடி ரூபாய் செலவு. அது யாருடைய பணம்? அவருக்கு என்று ஒரு சொகுசு வீடு, 1500 கோடி ரூபாய் செலவில் தலைமைச் செயலகம் கட்டப்படுகிறது.

ரீல்ஸ் ஆட்சி

பெண்கள் மாணவர்கள் மக்கள் அவர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக எந்த திட்டம் செய்யவில்லை. வெறும் வாய் சொல் வெறும் வெற்று வார்த்தை. பயன்படுத்தி ஆட்சி நடத்தி விடலாம் மக்களை ஏமாற்றி விடலாம். சினிமா என்பது மூன்று மணி நேரம் ரசித்து பார்க்கலாம். சில தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். ரீல்ஸ் போட்டு ஏமாற்றி விடலாம் என நினைக்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். எதைப் பற்றி வருத்தப்படாமல் ரோடு ஷோ நடத்துகிறீர்கள். மாணவர்களை ரீல்ஸில் காண்பிக்கிறீர்கள்.

மின்சார கட்டணம்

மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்க்கை திண்டாட்டமாக இருக்கிறது. ஆளுகின்ற ஆட்சியினர் இதனை கண்டு கொள்ளவில்லை. அவர்கள் ஒரே கொண்டாட்டத்தில் உள்ளனர். இனியாவது இந்த ஆட்சி விழித்துக் கொள்ளுமா? மக்கள் நலனுக்காக ஏதாவது செய்வார்களா? மக்கள் நலனுக்காக நடவடிக்கை எடுப்பார்களா? கொண்டாட்டங்களை தவிர்த்து மக்களுக்காக ஒரு நல்லாட்சி நடத்திட வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+