தூத்துக்குடியில் மீண்டும் களம் இறங்கிய கீதாஜீவன்... ஸ்டாலினுக்கு வெற்றியை பரிசளிப்பாரா!
தூத்துக்குடி: 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. இதில் தூத்துக்குடி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி திமுகவில் தான் மறையும் வரை கோலோச்சிய, பெரியசாமியின் மகள்தான் கீதா ஜீவன். 2006-11 வரையிலான கருணாநிதி ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் பணியாற்றியவர் கீதா ஜீவன்.

தமிழக தேர்தல் களம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக என முக்கிய கட்சிகள் பம்பரமாக சுழன்று வருகின்றன. அதிமுக 177 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. மேலும், பாஜக, பாமகவுக்கு தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து விட்டது. மேலும், மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. தொகுதி பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டதால் திமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று திமுக அறிவித்தது.
அதன்படி 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. இதில் தூத்துக்குடி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி திமுகவில் தான் மறையும் வரை கோலோச்சிய, பெரியசாமியின் மகள்தான் கீதா ஜீவன். 2006-11 வரையிலான கருணாநிதி ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் பணியாற்றியவர் கீதா ஜீவன்.
தொடர்ந்து 2016-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். தூத்துக்குடி தொகுதியில் தந்தை பெரியசாமியை போல் கீதா ஜீவன் கோலோச்சி வருகிறார். இதனை தொடர்ந்து வழக்கம்போல் தற்போது கீதா ஜீவனுக்கு திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications