Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கையால் கடித்து.. தலையில் உடைத்து.. ஸ்ரீ ராம தூத யோக ஆஞ்சநேயருக்கு 1008 இளநீர் அபிஷேகம்! பக்தி பரவசம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா. 1800 இளநீரை ஒரே நேரத்தில் வாயால் உரித்து தலையில் உடைத்து ஆஞ்சநேயர் பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமனின் பக்தரான ஆஞ்சநேயர் சுவாமி மார்கழி மாத அமாவாசையுடன் இணைந்து வரும் மூல நட்சத்திரத்தில் பிறந்ததாக ஐதீகம். அவரது ஜெயந்தி நிகழ்ச்சி அனுமன் ஜெயந்தி ஆக உலகம் முழுவதும் வசிக்கும் இந்து மக்களால் அனுசரிக்கப்படுகிறது.

spirituality hanuman jayanthi tuticorin

அதன்படி 30 ஆம் தேதியான இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல், சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

அனுமன் ஜெயந்தி:

அது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கும் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடை மாலை சாத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமியை ஜெய் ஆஞ்சநேயா என்ற பக்தி முழக்கத்திற்கிடையே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு பால், நல்லெண்ணெய், தயிர், மஞ்சள், சீயக்காய் தூள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது.

1008 இளநீர் அபிஷேகம்:

அந்த வகையில், திருச்செந்தூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா. 1800 இளநீரை ஒரே நேரத்தில் வாயால் உரித்து தலையில் உடைத்து ஆஞ்சநேயர் பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சரவணபொய்கை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராம தூத யோக ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்:

விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேங்காய் உரிப்பு நடந்தது. இதில் அருள் வந்த ஆஞ்சநேய பக்தர்களான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவேசத்துடன் 1800 இளநீரை பற்களால் உரித்தும் தலையால் அடித்து அபிஷேகம் செய்து கொண்டனர்.

மெய் சிலிர்த்த பக்தர்கள்:

இதைப் பார்த்த அங்கு நின்ற பக்தர்கள் மெய் சிலிர்த்து நின்றனர். மேலும் அருள் வந்து பக்தர்கள் உரித்த இளநீரை கோவிலுக்கு வந்த மற்ற பக்தர்கள் பிரசாதமாக எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்தக் கோவிலில் ஆஞ்சநேய சுவாமி நின்ற நிலையில் ராமனை நினைத்து கண்களை மூடி தியானம் செய்யும் வகையில் அருள் பாலிக்கிறார்.

கண்காணிப்பு தீவிரம்:

இந்த கோவிலில் தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கி, அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இன் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+