Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே சாதி தான்.. ‘எப்படி என் பேச்சை மீறி மகள் முடிவெடுக்கலாம்..?’ எட்டயபுரம் படுகொலை பின்னணி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : மகள் காதல் திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ளாத தந்தை, 28 நாட்களுக்குப் பிறகு வீடு புகுந்து காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்யும் காதலர்களை, பெற்றோரே ஆணவப் படுகொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

எட்டயபுரம் அருகே, தனது எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகளையும், அவரது கணவரையும் திருமணமான 28 நாட்களுக்குப் பிறகு வெட்டிப் படுகொலை செய்துள்ளார் பெண்ணின் தந்தை.

 காதல் திருமணம்

காதல் திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா (20). கல்லூரி மாணவியான ரேஷ்மா இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கூலித் தொழிலாளியான மாணிக்கராஜா (26) என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு லாரி ஓட்டுநராகப் பணிபுரியும் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வேறு வரன்

வேறு வரன்

மேலும், முத்துக்குட்டி தனது மகளுக்கு மற்றொரு வரன் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாணிக்கராஜா-ரேஷ்மா ஜோடி ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, மதுரை மாவட்டம், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது காதல் ஜோடி.

போலீசார் எச்சரிக்கை

போலீசார் எச்சரிக்கை

போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் திருமணம் செல்லும் எனக் கூறி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினர். மேலும், அவர்கள் இருவரும் வீரப்பட்டி கிராமத்துக்கு வர வேண்டாம் என எட்டயபுரம் போலீசாரும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், சுமார் 4 வாரங்களுக்குப் பிறகு மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் போலீசாரிடம் தெரிவிக்காமல் சொந்த ஊரான வீரப்பட்டிக்கு வந்துள்ளனர்.

ஊர் திரும்பிய காதல் ஜோடி

ஊர் திரும்பிய காதல் ஜோடி

அவர்கள் ஊருக்குள் வருவதற்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆத்திரத்துடன் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து ஊர்மக்கள் முத்துக்குட்டியை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் அதே ஊரில் உள்ள மாணிக்கராஜாவின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

 தனியாக

தனியாக

மகள் தனது விருப்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரம் அடங்காத ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, அவர்கள் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் புகுந்து, மகள் மற்றும் மகளின் கணவர் என இருவரையும் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மாணிக்கராஜாவின் தாய் மகாலட்சுமி மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது தனது மகன் மற்றும் மருமகள் ரேஷ்மா இருவரும் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.

வெட்டிக் கொலை

வெட்டிக் கொலை

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் முத்துக்குட்டி மற்றும் கொலைக்கு உடந்தையான அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். திருமணமான 28 நாட்களில் காதல் ஜோடி, பெண்ணின் தந்தையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக் கொலை

ஆணவக் கொலை

பொதுவாக, இந்தியச் சூழலில் ஆணவக் கொலை என்கிற பதம், குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக பெண்ணை, பெண்ணின் குடும்பத்தினரே படுகொலை செய்வதைக் குறிக்கிறது. பெரும்பாலும் ஆணவப் படுகொலைகள் சாதி காரணமாகவே நடக்கின்றன. ஆனால், வீரப்பட்டி படுகொலையில், மகள் தன் பேச்சை மீறி சுதந்திரமாக முடிவெடுத்ததை ஏற்க முடியாமல் பெற்றோர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+