இன்ஸ்டா ரீல்ஸ்க்காக.. குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தூத்துக்குடி ரஞ்சித் பாலா.. கடைசியில் ஆப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாத்தான்குளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தீயில் குதித்து வீடியோ எடுத்த யூடியூபர் ரஞ்சித் பாலா, அவரது நண்பர் சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். லைக்குகள் வாங்குவதற்காக இப்படி வீடியோ எடுத்து கடைசியில் கம்பி எண்ணி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே சாத்தான்குளத்தில் விபரீத சாகத்தில் ஈடுபட்ட 2 யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான லைக்குகளை வாங்குவதற்காக இப்படி விபரீத வீடியோவை எடுத்துள்ளனர். விபரீத வீடியோ எடுத்த 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சாத்தான்குளம் வாலாந்தூரையை சேர்ந்தவர் யூடியூபர் ரஞ்சித் பாலா. இவரது நண்பர்கள் சிவகுமார், இசக்கி ராஜா. யூடியூபர் ரஞ்சித் பாலா இன்ஸ்டாவில் வீடியோ போட்டு வருகிறார். 22 லட்சம் சப்ஸ்க்ரைபர்களை வைத்திருக்கிறார் ரஞ்சித் பாலா. இவரது வீடியோவிற்கு பல லட்சக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும் பெறுகிறார். இப்படியாக வித்தியாசமான் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பல லட்சங்களை சம்பாதித்து இருக்கிறார்.
இருந்தாலும் இன்னும் அதிகம் சப்ஸ்கிரைபர்கள் வேண்டும் என்றும், லைக்குகளை அதிகம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படு வித்தியாமான, சாகச வீடியோக்களை எடுக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி தான் சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு குளத்தில் பெட்ரோலை ஊற்றி அதில் தீயை பற்ற வைத்து தீயில் குதித்து வீடியோ எடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஒருவர் குளத்தில் பெட்ரோலை ஊற்றுகிறார். இன்னொருவர் அதில் தீயை கொளுத்தி போடுகிறார
தீ பற்றி எரிந்ததும் தூரத்தில் இருந்து ஓடி வந்து தீயில் தலைகீழாக குதிக்கிறார். குளத்தின் மேற்பரப்பில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் நிலையில், ஆபத்தை பொருட்படுத்தாமல் வியூவ்ஸ், லைக்குகளுக்காக அதில் தலைகீழாக குதிக்கிறார். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் போட்டுள்ளனர். இந்த விபரீத வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. அப்படியே இந்த வீடியோ போலீஸ் கண்ணிலும் பட்டுள்ளது.
இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் இப்படி லைக்குகளுக்காக இப்படி விபரீத சாகசம் செய்த யூடியூபர்கள் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில், யூடியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
யூடியூப், இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல்கள், சினிமா வசனங்களுக்கு டப்பிங் பேசி பலர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இன்ஸ்டா, யூடியூப்களில் நல்ல வருமானமும் கிடைப்பதால், பலர் முழு நேரமாக வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். நல்ல முறையில் வீடியோ போட்டு பலர் லைக்ஸ்களை பெற்று வரும் நிலையில், சிலர் லைக்ஸ்களுக்காக விபரீதத்திலும் ஈடுபடுகிறன்றனர்.
வித்தியாசமாக எதையாவது செய்கிறேன் என்ற பெயரில் பைக்குகளில் சாகசம் செய்வது.. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக எதையாவது செய்து வம்பில் சிக்கிக் கொள்வதையும் காண முடிகிறது. இப்படி வரம்பு மீறிய வீடியோக்களால்.. போலீசாரிடம் சிக்கி கம்பி எண்ணும் நிலைக்கு செல்வதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில் நல்ல வீடியோக்களை பதிவிடுவதில் இதுபோன்ற யூடிபர்கள் கவனம் செலுத்தலாம் என்று சொல்கிறார்கள் நெட்டிசன்கள்.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications