தாராபுரம் சத்தியபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலின்! கண்டிக்காமல் கனிமொழி கொடுத்த ஸ்டர்ன்னிங் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் உருவக்கேலி குறித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்த கேள்விக்கு, "யாரையும் அப்படி மனம் கோணக் கூடிய அளவில் பேசக் கூடியவர் அவர் இல்லை!" என தூத்துக்குடி எம்பி கனிமொழி வித்தியாசமான ஒரு பதிலை சொல்லியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் நியாயத்திற்கு ஒரு வெற்றியும், மக்களை ஏமாற்றி ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளக் கூடிய நடவடிக்கைகளை எடுத்து வரும் தவெகவுக்கு ஒரு பாடம் சொல்லித் தரக் கூடிய அளவிற்கு மக்கள் வாக்களிப்பர் என நம்புகிறேன்.

Kanimozhi

தவெக ஆட்சி எந்தளவுக்கு தூய சக்தி என்பதை அவர்களது கூட்டணியில் இருக்கும் கட்சிகளே எந்தளவுக்கு விமர்சிக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம், நாங்கள் எந்த தவறையும் செய்யமாட்டோம் என தொடர்ந்து மேடைக்கு மேடை பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. உண்மையில் அப்படி இருக்க வேண்டும்.

நலத்திட்டங்கள் இல்லை

இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை, பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நாளும் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் அச்சத்துடன் வாழக் கூடிய ஒரு சூழல் நிலவி வருகிறது. வளர்ச்சிக்கான திட்டங்களும் இல்லை. தொழில் முதலீட்டையும் தவெக அரசு கொண்டு வரவில்லை. இதில் மக்களிடம் நாங்கள் தூயசக்தி என சொல்லி அந்த மக்களிடமே பணப்பட்டுவாடா செய்யும் தவெக அரசுக்கு பணம் எங்கிருந்து வருகிறது. இப்படிப்பட்டவர்களின் உண்மையான முகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சாரம் செய்யாத விஜய்

சட்டசபை தேர்தலுக்கே அந்த அளவுக்கு பிரச்சாரம் செய்யாத நிலையில் தற்போது இடைத்தேர்தலுக்கு தெருத்தெருவாக போய் பிரச்சாரம் செய்வதால் தம்பி விஜய்க்கு இடைத்தேர்தலில் ஒரு பயம் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்த விவகாரத்தில், யாரையும் அப்படி மனம் கோணக் கூடிய அளவில் பேசக் கூடியவர் அவர் இல்லை. துரைவைகோ எம்பியாக இருக்க திமுகவினரின் உழைப்பு இருக்கிறது என்பதை அவர் மறந்துவிடக் கூடாது என கனிமொழி தெரிவித்தார்.

தாராபுரத்தில் ஸ்டாலின் பேச்சு

தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தவெக வேட்பாளர் சத்தியபாமாவை மிகவும் கொச்சையான அர்த்தம் வரும் வகையில் உருவக்கேலி செய்திருந்தார். இதை அனைத்து கட்சியினரும் கண்டித்துவிட்டனர்.

சத்தியபாமாவை கிண்டல் செய்த ஸ்டாலின்

விஜய்யும் நேற்று தாராபுரத்தில் ரோடு ஷோவின் போது, "தவெக வேட்பாளர் சகோதரி சத்தியபாமாவை காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு ஸ்டாலின் உருவக்கேலி செய்துள்ளார். பெண்களை யார் அசிங்கமாக விமர்சித்தாலும் நான் தட்டி கேட்பேன்" என கண்டனம் தெரிவித்திருந்தார்.

உருவக்கேலிக்கு கண்டனங்கள்

மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஸ்டாலினின் உருவக்கேலியை கண்டித்துள்ளன. ஏற்கெனவே பெண்களுக்கு எதிராக பேசிய முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ஆ.ராசா, முதல்வரின் எலும்பை உடைப்பேன் என கூறிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோருக்கு எதிராக கனிமொழி கண்டன பதிவை போட்டிருந்தார்.

உதயநிதி கிண்டல்

உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே காவிரி விவகாரத்திலும் புதிய தலைமைச் செயலக விவகாரத்திலும் இரட்டை அர்த்தம் வரும் வகையில் பேசியிருந்த நிலையில் அவரை கண்டிக்க வேண்டிய இடத்தில் இருக்கும் தந்தை ஸ்டாலினே இப்படி இரட்டை அர்த்தத்தில் பேசுகிறாரே என பலர் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அப்படிப்பட்ட சூழலில் திமுக எம்பி கனிமொழி இந்த உருவக்கேலி விவகாரத்தில் கண்டனத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. குறைந்தபட்சம் பெயரை குறிப்பிடாமல் ஏதாவது திருக்குறளை மேற்கோள்காட்டி கண்டிப்பார் என எதிர்பார்த்த நிலையில் கனிமொழியின் பதில் வித்தியாசமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+