'ஆன் தி வேயில்' அப்படியே ஒரு டீ சொல்லுங்க! சாப்பிடக் கூட நேரமில்லாமல் தொகுதியை வலம் வந்த கனிமொழி!
தூத்துக்குடி: சாப்பிடக் கூட நேரமில்லாமல் தனது தூத்துக்குடி தொகுதியில் தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. போகிற போக்கில் காரை நிறுத்தி பேக்கரி ஒன்றில் மிகவும் கேசுவலாக தேநீர் குடித்திருக்கிறார்.
தனது கணவர் அரவிந்தன் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தால் கனிமொழியால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொகுதிப் பக்கமே வர முடியவில்லை.
இதனால் ஏராளமான பணிகள் அப்படியே தேங்கிக் கிடந்த நிலையில் இன்று காலை முதல் சங்கு சக்கரத்தை போல் தொகுதியில் சுற்றி சுழன்றடித்தார்.

கனிமொழி எம்.பி.
கனிமொழியை பொறுத்தவரை வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது தனது தொகுதியில் இருப்பார். இந்நிலையில் அவரது கணவர் அரவிந்தனுக்கு ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையிலும், அதைத் தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெற்று வந்ததால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் உடனிருந்து கணவரின் உடல்நலத்தை கவனித்துக் கொண்டார் கனிமொழி.

பணிகள் தேங்கி நின்றன
இதன் காரணமாக அவரது ஆய்வுப் பணிகள் அப்படியே தேங்கி நின்றன. இதனிடையே அரவிந்தனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் தொகுதிப்பணி, நாடாளுமன்றப் பணி என பிசியாகிவிட்டார் கனிமொழி. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், உடன்குடி, கருங்குளம், சேரகுளம், செதுங்கநல்லூர், விட்டிலாபுரம், தூத்துக்குடி என காலை முதல் இரவு 7.30 மணி வரை கனிமொழி பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக இருந்திருக்கின்றன.

சாப்பிடக் கூட நேரமில்லாமல்
இதனால் சாப்பிடக் கூட நேரமில்லாமல் கனிமொழி தொகுதியை ரவுண்டு அடித்திருக்கிறார். அதிகாரிகள் கூட ஓய்வெடுப்பதாக இருந்தால் எடுத்துவிட்டு வாருங்கள் மாலை நிகழ்ச்சிகளுக்கு செல்லலாம் எனக் கேட்டுக்கொண்டும் அதனை திடமாக மறுத்த கனிமொழி ஊர் விட்டு ஊர் தொடர்ச்சியாக பயணித்திருக்கிறார். அப்போது ஆன் தி வேயில் ஒரு பேக்கரியை பார்த்த கனிமொழி சடாரென காரை நிறுத்தச் சொல்லி இறங்கி ஒரு டீ சொல்லுங்க என மிகவும் கேசுவலாக அமர்ந்திருக்கிறார்.

கனிமொழி ஆய்வு
ஒரு டீயை குடித்துவிட்டு, ஒரு கேக்கை சாப்பிட்டுவிட்டு அப்படியே மீண்டும் தனது ஆய்வுப் பணிகளை மாலையில் தொடர்ந்திருக்கிறார். பேக்கரியில் ஸ்நாக்ஸ் வாங்க வந்த பலரும் கனிமொழியா இது என வியந்ததோடு அவரிடம் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இன்று சட்டசபை நடைபெற்றதால் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் சென்னையில் இருந்ததால் கனிமொழி நிகழ்ச்சிகளில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications