குலசை தசராவுக்கு போறீங்களா?.. பக்தர்களுக்கு புது ரூல்ஸ்.. தூத்துக்குடி எஸ்பி ஸ்டிரிக்ட் ஆர்டர்
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்ச்சி அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும், பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
நவராத்திரி காலத்தில் வட இந்தியாவில் நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் தசரா பண்டிகை கொண்டாடப்படும். கர்நாடக மாநிலம், மைசூரில் தசரா திருவிழா மிகவும் பிரசத்தி பெற்றது. தமிழகத்தில் தசரா பண்டிகை கொண்டாடப்படும் ஒரே கோவில் குலசேகரப்பட்டினம் தான். நவராத்திரி துவங்கியது முதல் 11 நாள் திருவிழாவாக தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில் நடக்கும் தசரா திருவிழா நாடு முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கான மக்கள் 10 நாள்கள் விரதமிருந்து பல்வேறு வேடங்களை அணிந்து முத்தாரம்மனை பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.
வழக்கம்போல இந்த ஆண்டும் தசரா திருவிழா குலசேகரத்தில் விமரிசையாக தொடங்கி உள்ளது. தசரா திருவிழா கடந்த 3 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்தாவது நாளான அக்டோபர் 12ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசூரசம்காரம் நடைபெறும்.
இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 11 ஆம் திருநாளான அக்டோபர் 13-ஆம் தேதி மாலையில் அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன் பக்தர்களும் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். தசரா திருவிழாவின் நிறைவு நாளான 14ஆம் தேதி காலையில் சிறப்பு அபிசேக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், குலசை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கூறியுள்ளதாவது: பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளின் வசிதிக்காக 30 தற்காலிக பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 17 ஆயிரம் வாகனங்களை நிறுத்துமம் வகையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வரை ஒரு வழிப் பாதையில் செல்லும் வகையிலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பிறகு மற்றொரு பாதை வழியாக செல்லும் வகையில் மூன்று வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளை கண்காணிக்க போக்குவரத்து காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
குலசை சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக காண 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத் துறை சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதி, 24 மணி நேரம் இயங்கக் கூடிய மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் மக்களைப் பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு பணி மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருவிழாவின்போது 9 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 30 டிஎஸ்பிக்கள் தலைமையில், 4 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும் பகுதி முழுவதும் சுமார் 250 க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், நடமாடும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
குலசை திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய ஜாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கொடிகள், டீ-ஷர்ட்கள் ஆகியவற்றை அணிந்து வரக் கூடாது. ஜாதி அடையாளங்களுடந் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேடமணிந்து வரும் பக்தர்கள் காவல் துறையினர் போன்று வேடம் அணியக் கூடாது. எந்தவொரு ஆயுதங்களையும் எடுத்து வர அனுமதியில்லை. தடையை மீறி ஆயுதங்கள் கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications