நிலத்தை அளக்க இனிமே தாசில்தார் அலுவலகம் போகாதீங்க.. ஆன்லைனில் நில அளவை வசதி.. தூத்துக்குடிக்கு குஷி
தூத்துக்குடி: நிலத்தை அளக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய பொது சேவை மையங்களை அணுகி, நில அளவை கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
எவ்வளவுதான் கவனித்து நிலம் வாங்கினாலும், நில அளவுகள் சிலசமயம் மாறிவிடுகின்றன.. பட்டாவில் ஒன்றாகவும், நிலத்தை அளக்கும்போது வேறு ஒரு அளவீடாகவும் உள்ளது. சிறிதளவு நிலஅளவில் மாற்றம் இருந்தாலும், அதனை விற்க முடியாமல் போய்விடும். எனவே, நிலத்தை சரியாக அளந்து வைத்து கொள்ள வேண்டும்.

தாசில்தார் ஆபீஸ்
இப்படி நில அளவை செய்வதற்கு தாசில்தார் ஆபீசுக்கு சென்று, உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் நிலைமை இருந்தது.. இதனால், தாமதம், கையூட்டு போன்ற சலசலப்புகளும் எழுந்தன. ஆனால், இந்த மொத்த சிக்கலையும் தீர்க்க இணையவழி சேவைகளை அரசு அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவிடுவதற்கு சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
இது குறித்து தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பை ஒன்றை, தன்னுடைய மாவட்ட மக்களுக்கு விடுத்துள்ளார்.. அந்த செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் நிலஅளவை செய்ய எப்போது வேண்டுமானாலும் வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்தனர்.
ஆனால், தற்போது வட்ட அலுவலகங்களுக்கு செல்லாமல், httstamilnilam.tn.gw.incitizen என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதலமைச்சரால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல். Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தலாம்.
நில அளவரால் பதிவேற்றம்
தற்போது, தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுசேவை மையங்கள் (இ-சேவை) மூலமாக விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அழைப்பு மூலம் தெரிவிக்கப்படும். நிலஅளவை செய்யப்பட்ட பின் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் hts eservicestngwin என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications