பேச்சை நிறுத்திய மகாராணி.. ஆத்திரத்தில் உயிரை பறித்த இளவரசன்.. தூத்துக்குடியில் ஒரு படுகொலை!
கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கொலை செய்த நபர் சரணடைந்தார்
Recommended Video
தூத்துக்குடி: இளவரசனுடன் மகாராணி பேசவே இல்லையாம். அதனால்தான் கொலை செய்துள்ளாராம். கதை இல்லை.. நிஜமாகவே இறந்தவர் பெயர் மகாராணி, கொலையாளி பெயர் இளவரசர்!
தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த தம்பதி நடேசன் - மகாராணி. நடேசன், கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கிறார்.
மகாராணிக்கு 28 வயதாகிறது. இவர்களுக்கு விம்ரித் என்ற 5 வயது மகன் உள்ளான். இந்த நிலையில் சம்பவத்தன்று, நடேசன் வழக்கம்போல் வேலைக்கு போய்விட்டார்.

ஆஸ்பத்திரி
மகனும் ஸ்கூலுக்கு போய்விட்டான். அப்போது, மகாராணியின் தந்தை உலகமுத்து மதியம் மகளை பார்க்க வீட்டுக்கு வந்தபோது, மகாராணி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி உள்ளார். இதை கண்டு அலறிய உலகமுத்து, மகளை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல முயன்றார், ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்தது.

மகாராணி
இது சம்பந்தமாக சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் மோப்ப நாயுடன் வந்து விசாரணை ஆரம்பித்தனர். வீட்டில் மகாராணி தனியா இருப்பதை அறிந்து யாரோ கொலை செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடிந்ததே தவிர, உண்மையான காரணம் தெரியாமல் போலீஸ் திணறியது.

சரண்
எனினும், இளவரசன் என்பவர் மீது சந்தேகம் வந்தது. இவர்தான் மகாராணியுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. இந்த நிலையில் தென்காசி கோர்ட்டில் இளவரசன் சரண் அடைந்துள்ளார். எதற்காக கொலை செய்தார் என்று போலீசாரிடம் சொன்னதாவது:

வாக்குமூலம்
"என்கூட பேசுறது மகாராணியின் புருஷனுக்கு தெரிஞ்சு போச்சு. அதனால் மனைவியை கண்டித்து இருக்கிறார். அந்த பேச்சை கேட்டு கொண்டு, என்கூட மகாராணி பேசவே இல்லை. அந்த ஆத்திரத்தில்தான், அவரை வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொன்னுட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications