இறந்த பெண்ணின் உடலில் 5 பவுன் நகை! துக்க வீட்டில் வாலிபர் செய்த அசிங்கம்! தூத்துக்குடியே ஆடிப்போச்சு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் துக்க வீட்டுக்கு சென்ற இளைஞர் ஒருவர் மாலை அணிவிப்பது போல் பாவனை செய்து இறந்தவரின் உடலில் இருந்த 5.75 சவரன் நகையை நைசாக திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடக்கம் செய்யும் போது நகை காணாமல் போனது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.
துக்கம் நிறைந்து இருக்கும் இறந்த வீட்டில், வாலிபர் ஒருவர் 5 பவுன் நகையை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் இப்படியும் கூடவா செய்வார்கள் என நினைக்கும் அளவுக்கு நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் முரசொலி மாறன். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி. 30 வயதான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 12 ஆம் தேதி உயிரிழந்தார். சிறிய வயதிலேயே மகேஸ்வரி இறந்துவிட்டதால் மொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்தது. 13 ஆம் தேதி அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடலில் அணிந்து இருந்த நகைகளை உறவினர்கள் கழற்ற தொடங்கினர். அப்போது, மகேஸ்வரி உடலில் கிடந்த 5.75 சவரன் நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், துக்க வீட்டுக்கு வந்த சிலரிடம் நகை காணவில்லை.. யாரும் பார்த்தீர்களா என்று விசாரித்தனர். ஆனால் யாரும் தெரியவில்லை என்று கூறிவிட்டனர். இதையடுத்து மகேஸ்வரி உடலுக்கு முரசொலி மாறன் மஞ்சள் கயிறால் தாலி கட்டினார். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து நகையை வீட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேடிப்பார்த்து கிடைக்காததால், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது துக்க வீட்டுக்கு வந்த உறவினரான கொழுந்துவேல் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். கொழுந்துவேல் தான் மாலை அணிவிக்கும் போது அப்படியே நைசாக நகையை திருடியுள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். இதையடுத்து கொழுந்துவேலை கைது செய்த போலீசார் அவரை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications