Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பா சாகல.. கூடவே இருக்காரு! அவரை போலவே நேர்மையா இருப்பேன்..படுகொலை செய்யப்பட்ட விஏஓ மகன் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மணல் கடத்தலை தடுத்ததற்காக விஏஓ ஒருவர் கடந்த ஆண்டு சமூக விரோதிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உரிமையியல் நீதிபதியாக தேர்வாகியுள்ள படுகொலை செய்யப்பட்ட விஏஓவின் மகன், தனது தந்தை வழியை பின்தொடர்வேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் நதிக்கரை நாகரீகங்களில் முக்கியமானது பொருநை என்னும் தாமிரபரணி நாகரீகமாகும். அப்படிப்பட்ட நதி பாயும் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்தான் லூர்து பிரான்சிஸ். ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த இவரை ஏறத்தாழ அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தெரிந்திருந்தது. காரணம் இவரின் நேர்மைதான்.

Marshall Yesuvadian, who has been selected as a civil judge, has said that he will be honest like his father

பணியில் நேர்மையாக இருந்ததால் பல்வேறு தரப்பினரிடமிருந்து இவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்துக்கொண்டுதான் இருந்தன. இதனையடுத்து, தன்னை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அதிகாரிகள் இந்த கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி இருக்கையில்தான் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதியன்று மதியம் 12.30 மணிக்கு அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.

முறப்பநாட்டில் உள்ள லூர்துவின் அலுவலகத்திற்குள் புகுந்த 2 நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் லூர்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரது மரணத்திற்கு காரணம் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த முயன்றதுதான். தான் பிறந்து வளர் காரணாக இருந்த தாமிரபரணியிலிருந்து மணல் கடத்தப்படுவதை எதிர்த்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும், இன்னமும் மணல் கொள்ளையும், அதை தடுக்கும் விஏஓ மீதும் மிரட்டல்கள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இப்படி இருக்கையில், படுகொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸின் மகன் மார்ஷல் ஏசுவடியான் உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். தனது வெற்றி குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நான் நீதிபதியாக வேண்டும் என்பதுதான் அவருடைய பெருங்கனவு. மாவட்ட நீதிபதியாக இருக்கும் போது என்னை பார்க்க முடியும் என்றும், உயர்நீதிமன்ற நீதிபதியான பின்னர் என்னை பார்க்க முடியாது எனவும் அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்போதே என் தந்தையின் கனவு என்ன என்பதை நான் புரிந்துக்கொண்டேன்.

ஒவ்வொரு மகனுக்கும் தன் தந்தையின் கனவை நினைவாக்க வேண்டும் என்பது வெறியாக இருக்கும். அதேபோலத்தான் எனக்கும் இருந்தது. அப்பா இறந்த துயரத்தில் கூட வைராக்கியத்தோடு தேர்வுக்கு தயாரானேன். எனது தந்தையை போல நானும் நேர்மையாக பணியாற்றுவேன். அவர் என்னுடன்தான் இருக்கிறார்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+