கூடவே இருந்து குழி பறிக்கும் பாஜக! அதிமுக அலர்ட்டா இருக்கனும்! துரை வைகோவுக்கு வந்த திடீர் கரிசனம்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : திராவிட இயக்கங்களின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து சனாதன தத்துவங்களை சித்தாந்தங்களை தமிழகத்தில் புகுத்துவதற்கு பாஜகவினர் அலைந்து கொண்டிருக்கிறார்கள் எனவும், பாஜக கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருக்கிறது இதை அதிமுகவினர் உணர வேண்டும் என்று கோவில்பட்டியில் துரை வைகோ கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதிமுக மாவட்ட கழக சார்பில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துறை வைகோ கலந்து கொண்டு விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் துணைப் பொதுச் செயலாளர் இ.மு.ராஜேந்திரன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

துரை வைகோ

துரை வைகோ

பின்னர் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளரிடம் கூறுகையில்," பரந்தூர் விமான நிலையம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கிராம மக்களிடம் கருத்து கேட்டு விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படாதவாறு அமைக்கப்படும் என்று மாநில அரசு விளக்கம் கொடுத்துள்ளது. செண்பகா நதி அணைக்கட்டு திட்டத்தின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காண மதிமுக சார்பில் தமிழக அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும்.

ஒன்றிய அரசு

ஒன்றிய அரசு

விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை தடுக்க நிரந்தர தீர்வு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அட்டவணையில் மூன்றிலிருந்து ஐந்துக்கு மாற்றினால் மட்டுமே இந்த காட்டுப் பள்ளிகளின் நடமாட்டத்தை தடுக்க முடியும். பெட்ரோல் டீசல் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் ஒன்றிய அரசுதான்.

பாஜக

பாஜக

ஆளும் பாஜக மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருக்கிறது என்று அண்ணாமலை கூறி வருவது ஊரை ஏமாற்றுவது தான் அவருடைய வேலை. பாஜக ஆளும் மாநிலத்தில் ஊழல் இல்லையா வாரிசு அரசு இல்லையா கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிய கூடாது. 70 வருடமாக திராவிட இயக்கங்கள் பொய்யை விதைத்து மக்களை ஏமாற்றி வருவதாக அண்ணாமலை கூறி வருகிறார்.

அதிமுக

அதிமுக

திராவிட இயக்கங்களின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து சனாதன தத்துவங்களை சித்தாந்தங்களை தமிழகத்தில் பூத்துவதற்கு பாஜக அலைந்து கொண்டிருக்கிறார்கள் பாஜக கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருக்கிறது இதை அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் உணர வேண்டும். பாஜகவின் சனாதன சக்திகளை தமிழகத்தில் இருந்து வேரோடு அகற்றுவது திமுக மதிமுகவிற்கு மட்டும் அந்த கடமை இல்லை அதிமுகவிற்கும் இருக்கிறது. மதுவிலக்கு கொள்கை என்பது எங்களுடைய கட்சியின் முக்கியமான கொள்கை அது தொடர்பாக தமிழரசுக்கு உரிய அழுத்தம் கொடுப்போம்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+