தூத்துக்குடியில் புதிய சகாப்தம்.. இந்தியாவின் வளர்ச்சியின் புதிய அத்தியாயம்.. மோடி பெருமிதம்
தூத்துக்குடி: வணக்கம் என தமிழில் கூறி தூத்துக்குடியில் பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார். வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எல். முருகன், 2047ல் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்காக பிரதமர் மோடி உழைக்கிறார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடியில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும்.
பல தசாப்தங்களாக கோரிக்கையாக இருந்தவை எல்லாம் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது கோரிக்கையாக இருந்தவை எல்லாம் தற்போது திட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, நெல்லையை மையப்படுத்தி பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு சிறப்பான வசதிகளை அளிப்பதுதான் நமது நோக்கம். ரயில் பாதை, சாலை வழி, கடல் வழி திட்டங்கள் ஒன்றாக இன்று தொடங்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
மக்களின் சேவகனாக நான் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுகிறேன். தமிழ்நாட்டில் வசிக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதும் உள்ள 75 கலங்கரை விளக்கங்கள் அனைத்தும் சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ள நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் முருகன், அமைச்சர் எ.வ.வேலு, கனிமொழி எம்.பி. பங்கேற்றுள்ளனர்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
தூத்துக்குடி ரூ.18000 கோடி கப்பல் முதலீடு ஆந்திராவுக்கு கைநழுவியது ஏன்? வெள்ளை அறிக்கை தேவை: ராமதாஸ்












Click it and Unblock the Notifications