தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.16.50 லட்சம் மருத்துவ உபகரணங்கள்.. மோகன் சி லாசரஸ் வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் மற்றும் புது வாழ்வு சங்கம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.16.50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரிடம் இயேசு விடுவிக்கிறார் ஊழிய அமைப்பின், இயக்குனர் மோகன் சி லாசரஸ் வழங்கினார்.

Mohan C Lazarus given medical equipments to Tuticorin government hospital

பல்ஸ் ஆக்சி மீட்டர்கள், காய்ச்சல் பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் இதில் இருந்தன.

இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணப்பன், மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Mohan C Lazarus given medical equipments to Tuticorin government hospital

நிகழ்ச்சியில் பேசிய மோகன் சி லாசரஸ் கூறுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது. நிறைய பேர் சிகிச்சை பெற்று நலன் பெற்று திரும்பியுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை வழங்கப்படுவதாக பொதுமக்களே தெரிவிக்கிறார்கள். இன்னும், உபகரணங்கள் இருந்தால் மேலும் சிறப்பாக சிகிச்சை வழங்க முடியும் என்று தெரிவித்தனர். எனவே நாங்கள் சிறிய அளவில் உதவி செய்துள்ளோம். கூடுதலாக உதவிகள் செய்ய உள்ளோம். அனைத்து மக்களும் இணைந்து செயல்பட்டால் இந்த நோய் பாதிப்பிலிருந்து வெளிவர முடியும். இதற்கு கடவுள் ஆசீர்வதிப்பார். இவ்வாறு மோகன் சி லாசரஸ் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+