Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காவியையும் தேசப்பற்றையும் பிரிக்க முடியாது.." பட்டுனு சொன்ன தமிழிசை! சொன்ன விளக்கத்தையும் பாருங்க

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பாரதியார் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், காவி நிறத்தையும் தேசப்பற்றையும் பிரிக்க முடியாது என்று பேசியுள்ளார்.

தூத்துக்குடி தாமிரவருணி தமிழ்வனம், மகாகவி பாரதியார் இலக்கிய பேரவை இணைந்து நடத்திய மகாகவி பாரதியார் 141வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் தமிழிசை சவுந்தரராஜன் விரிவாகப் பேசினார். உலகெங்கும் தமிழைக் கொண்டு செல்ல நாம் உலக மொழிகளைக் கற்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆளுநர் தமிழிசை

ஆளுநர் தமிழிசை

இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசுகையில், "ஜி 20 மாநாட்டைப் பாரத நாடு தலைமை ஏற்று நடத்துவதன் மூலம் பாரத நாடு உலகிற்கு ஒரு வழிகாட்டியாக விளங்கப் போகிறது. பொருளாதாரத்தில், சுற்றுச்சூழலில் இந்தியா பிற நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. சுதந்திரம் அடையும்போது இந்தியாவில் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால் இந்திய இன்று தடுப்பூசியைத் தயாரித்து 150 நாடுகளுக்கு வழங்கி உள்ளது.

பாரதியார்

பாரதியார்

பாரதியார் எல்லா மொழிகளையும் கற்றுக் கொண்டார். அவர் வழியில் இன்று தேசிய மொழிகள் தினம் கொண்டாடப்படுகிறது. பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற தமிழை புகழ்ந்துள்ளார். நமது தமிழ் மொழியை உலகம் முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாம் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும்.. பிற மொழியை கற்றுக் கொள்வதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம்.

அரசியல் காரணங்கள்

அரசியல் காரணங்கள்

புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி பாடத்தில் பாடங்கள் கற்பிக்கப்படும். மூன்றாவது மொழியாக இன்னொரு மொழியைக் கற்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக இன்றைய மாணவர்களுக்கு வரும் வாய்ப்பை யாரும் தட்டிப் பறிக்கக் கூடாது.. பாடத்திட்டங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது.. இளைஞர்கள் புத்தகங்களை அதிகமாகப் படிக்க வேண்டும்.. அதிலும் குறிப்பாக பாரதியின் புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும்.. பாரதிக்குத் தமிழகத்தில் இன்னுமே போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை..

ஜி20 மாநாடு

ஜி20 மாநாடு

பாரதி சாமானியர் அல்ல.. இவரைப் பாதுகாக்க வேண்டும் எனக் காந்தியே புகழந்துள்ளார். உலகிற்கே குருவாக இந்தியா விளங்கும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியவர் பாரதி. அவர் கூறியதை போலவே, இன்று இந்தியா உலக நாடுகளுக்குத் தடுப்பூசியைக் கொடுத்து குருவாக விளங்கியுள்ளது. "ஒளி படைத்த கண்ணினாய் வா வா.. உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா.. என்று கூறிய பாரதியின் வரியில் ஜி20 மாநாடு நடத்துவதன் மூலமாக உலக அரங்கில் இந்தியா தனித்துத் தலைநிமிர்ந்து நிற்கப் போகிறது

இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

இன்று நாட்டில் 75 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பாரத திருநாடு பொருளாதாரத்தில் மிகச் சிறப்பாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. ஒரு நாளைக்கு 5 லட்சம் கவச உடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் இப்போது நம்மிடம் உள்ளன. மருந்துகள் தயாரிப்பதிலும், தடுப்பூசிகள் தயாரிப்பதிலும், கவச உடைகள் தயாரிப்பதிலும் இந்தியா முன்னிலை வைக்கிறது. பாரதியை இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் அவருடைய வீடு புதுப்பிக்கப்பட வேண்டும்.

அனுமான் காவி நிறம்

அனுமான் காவி நிறம்

ராமாயணத்தில் அனுமான் தனது உடல் முழுக்க செந்தூரத்தை எடுத்து; காவியை எடுத்து உடலில் பூசிக் கொள்கிறார். அதைப் பார்த்து சீதை அனுமாரிடம், "உங்களுக்கு என்ன பைத்தியமா? செந்தூரத்தை எடுத்து; காவியை எடுத்து ஏன் உடலில் பூசிக் கொள்கிறீர்கள்" எனக் கேட்கிறார். அதற்கு அனுமார், "நெற்றியில் காவியை வைத்தால் தலைவனுக்கு நல்லது. அப்போது உடல் முழுக்க காவியை செந்தூரத்தை பூசிக் கொண்டால் தலைவன் ராமனுக்கு எந்தளவுக்கு நல்லது நடக்கும். இதன் காரணமாகவே நான் உடலில் பூசிக் கொள்கிறேன் எனப் பதிலளித்துள்ளார்.

தேசப்பற்று

தேசப்பற்று

நான் இப்படிச் சொல்வதால் உடனே தமிழிசை காவியை எடுத்து உடலில் பூசிக் கொள்ளச் சொல்கிறார்.. காவியைப் பற்றி பேசுகிறார் எனச் சிலர் வருவார்கள். ஆளுநராக இருந்து கொண்டு காவியைப் பேசலாமா என்பார்கள். நிச்சயம் பேசலாம். நமது தேசியக் கொடியின் முதன்மை நிறமே காவி தான். இதனால் தேசப்பற்று உள்ளவர்கள் யாரும் காவியை திறந்துவிட்டு தேசப்பற்றை முன்னிறுத்திப் பேச முடியாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+