கிருஷ்ணசாமிக்கு ஏமாற்றம் தந்த ஒட்டப்பிராம்.. தவெக வேட்பாளர் மதன்ராஜா வெற்றி உறுதியாகிறது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய தொகுதிகளில் ஒன்றான ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் தவெக வேட்பாளர் மதன்ராஜா சுமார் 26 ஆயிரத்து 232 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியின் விளிம்பில் இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 49 ஆயிரத்து 264 வாக்குகள் பெற்றுள்ளார். இங்கு அமமுக 24 ஆயிரத்து 353 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 16 ஆயிரத்து 67 வாக்குகளும் பெற்றுள்ளன. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 14 ஆயிரத்து 965 வாக்குகள் பெற்று ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.
ஒட்டபிடாரம் தொகுதியை பொறுத்தவரை ஒரு இடைத்தேர்தல் உள்ளிட்ட 15 தேர்தல்களை கண்டுள்ள ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுதந்திரா கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன. 2 முறை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளன. 4 முறை அதிமுக வென்று இருந்தது.

2026 தேர்தலில் இத்தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம் சுமார் 79.39% ஆகும் (இது முந்தைய தேர்தலை விட 9% அதிகம் என்பதால் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் டிரெண்ட தவெகவிற்கு சாதகமாக இருந்த நிலையில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஆரம்பத்தில சாதகமாக இருந்தது.
நேரம் செல்ல செல்ல முடிவுகள் மாறியது.இது வரை 21 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் தவெக வேட்பாளர் மதன்ராஜா 75 ஆயிரத்து 496 வாக்குகள் பெறறுள்ளார். இவர் திமுக வேட்பாளரை விட சுமார் 26 ஆயிரத்து 232 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியின் விளிம்பில் இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 49 ஆயிரத்து 264 வாக்குகள் பெற்றுள்ளார்.
இங்கு அமமுக 24 ஆயிரத்து 353 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 16 ஆயிரத்து 67 வாக்குகளும் பெற்றுள்ளன. புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 14 ஆயிரத்து 965 வாக்குகள் பெற்று ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் தவெக வேட்பாளர் இங்கு வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications