11 வயது சிறுமியை காரில் கடத்தி பாலியல் தொல்லை.. பால் வியாபாரி உள்பட 2 பேருக்கு வலைவீச்சு!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே 11 வயது சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த பால் வியாபாரி உட்பட 2 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் செந்தில். பால் வியாபாரம் செய்து வருகிறார். செந்திலும், ராமநாதபுரம் தெருவைச் சேர்ந்த பொன் சூர்யா ஆகிய இரண்டு பேரும் நண்பர்கள்.

இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்கள். சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த செந்தில், பொன் சூர்யா ஆகிய இரண்டு பேர் மீதும் ஆள் கடத்தல், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாகியுள்ள 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி ஆசிரியர் பாலியல் தொந்தரவு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாணவியை சீரழித்த காமக்கொடூர ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டான். காமக்கொடூர ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்ட்டுள்ளாள் . இதேபோல் கோவை அரசு கலைக்கல்லூரியில் பல மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பி.பி.ஏ துறை தலைமை பேராசிரியர் ரகுநாதன் கைது செய்யப்படான். .
மேலும் கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் கொடுமை காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications