மேடையில் பக்கத்தில் இருந்தும்.. கனிமொழி பெயரை புறக்கணித்த மோடி! அமைச்சர் அனிதாவுக்கு அழைப்பே இல்லை!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, மேடையில் இருந்த எல்லோர் பெயரையும் குறிப்பிட்டுவிட்டு கனிமொழி பெயரை மட்டும் புறக்கணித்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், ஆளுநர் உள்ளிட்ட மேடையில் இருந்தவர்களின் பெயரை வரிசையாக கூறியபோது, திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பெயரை குறிப்பிடாமல் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவுக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் கனிமொழியின் பெயரும் இடம்பெறவில்லை. தவிர்க்கப்பட்டிருக்கிறது. மாவட்ட அமைச்சர் என்ற முறையில் அமைச்சர் கீதாஜீவன் பெயர் அழைப்பிதழில் இடம்பெற்றது. அதே மாவட்ட அமைச்சர் என்ற முறையில் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.பி. என்ற முறையில் கனிமொழி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இது எதேச்சையாக நடந்து விட்டதா ? அல்லது திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருக்கிறதா? என உளவுத்துறை வட்டாரங்கள் விசாரிக்கத் தொடங்கியுள்ளன.
குலசேகரப் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு முழு காரணமாக இருந்தவர் கனிமொழி. அதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்தவரும் அவரே. அவரது முயற்சி இல்லையென்றால் இந்த திட்டம் சாத்தியப்பட்டிருக்காது. 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி, கருணாநிதியின் கடிதத்தைக் குறிப்பிட்டு, ஏவுதளம் வேண்டுமென மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார்.
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பாஜக ஆட்சியமைத்து முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏவுதளம் வேண்டுமென வலியுறுத்திய கனிமொழி எம்.பி பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கனிமொழி எம்.பி கடிதம் எழுதினார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக அளித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பின்னர் மக்களவையில் நவம்பர் மாதம் 7 தேதி மீண்டும் கோரிக்கை வைத்தார்.
இப்படி தொடர்ச்சியக பல்வேறு முன்னெடுப்புகளை கனிமொழி முன்னெடுத்த நிலையில் இந்த புறக்கணிப்பு நடந்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் கனிமொழியின் பெயரை திட்டமிட்டே மறைக்க முயல்கிறது மத்திய மோடி அரசு என்று கூறுகின்றனர் தமிழக அரசின் உயரதிகாரிகள்.
அதேபோல் மேடையில் இருந்த அமைச்சர் எ.வ.வேலுவையும் மோடி கண்டுகொள்ளவில்லை. இன்னும் .இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், குலசேகரப்பட்டினம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. நியாயமாக பார்த்தால் கீதா ஜீவனுக்கு பதில் விளம்பரங்களில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெயர் கொடுக்கப்பட்டு அவர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதுவும் நடக்கவில்லை. தனக்கு முறையான அழைப்பு இல்லாததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கே செல்லவில்லை.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளதால் பிரதமருடன் ஒரே மேடையில் அமர வைக்கக் கூடாது என தமிழக பாஜக தலைகள் டெல்லிக்கு சில நாட்களுக்கு முன்பே தகவல் அனுப்பியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications