“மரியாதை இல்லை”.. சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி மா.செ! திடீர் விலகல்!
தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் 32 பேர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்காக தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தங்களுக்கு கட்சியில் சிறிய மரியாதை கூட இல்லை என நாதகவில் இருந்து விலகிய சுப்பையா பாண்டியன் தெரிவித்துள்ளார். நாதகவில் இருந்து விலகியுள்ள சுப்பையா பாண்டியன், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாதக சார்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் பலர் கட்சியில் இருந்து விலகியிருந்தனர். அதன் பின்னர் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார் விலகினார். இருவரும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கட்சியில் இருந்து விலகி, சீமான் பேசிய தனிப்பட்ட கருத்துக்கள் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினார். அதேபோல், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டனும், சீமான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு கட்சியில் இருந்து விலகினார்.
நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவஞ்சி விலகியுள்ளார். கட்சித் தலைமையின் செயல்பாடுகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும், குறிப்பாக பெண்களுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்ட நாதக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவதால் தொடர் தோல்வியைச் சந்திப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications