மணல் கொள்ளை குறித்து புகார் கூறிய கிராம நிர்வாக அலுவலர் அரிவாளால் வெட்டி படுகொலை.. ஒருவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் மணல் கொள்ளை குறித்து போலீஸாருக்கு விஏஓ லூர்து பிரான்சிஸ் புகார் கூறியதால் அவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி முறப்பநாட்டில் ஆறுகளில் மணல் கொள்ளையடிக்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குறிப்பிட்ட சிலர் மீது புகார் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸாரும், வருவாய் துறையினரும் மணல் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தங்கள் மீது புகார் கொடுத்தது லூர்து பிரான்சிஸ் என மணல் கடத்தல் கும்பலுக்கு தெரியவந்தது. இதையடுத்து இன்றைய தினம் மர்மநபர்கள் சிலர் கிராம நிர்வாக அலுவலர் அறைக்கு சென்றனர். அங்கிருந்த லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த லூர்து பிரான்சிஸை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராமசுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதன் பேரில் மற்றவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications