தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவ்வளவு பேசுனாங்களே.. சட்டென வந்த சசிகலா புஷ்பா! நேரா கனிமொழி மீது அட்டாக்.. இப்படி சொல்லிட்டாங்களா!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா திமுக எம்பி கனிமொழி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி, மேயர் சசிகலா புஷ்பா தற்போது பாஜகவில் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது கணவனை பிரிந்து இரண்டாவதாக ராமசாமி என்ற வழக்கறிஞரை திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில், சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் ஆண் ஒருவர் படுத்திருந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சசிகலா புஷ்பாவின் இரண்டாவது கணவர் ராமசாமி போலீசில் புகார் அளித்துள்ளார். கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடியோவை பார்த்தீங்களா.. கனிமொழி படிச்சு படிச்சு சொன்னாங்களே? ஸ்டாலினும் விடலையே! ப்ச் இப்ப பாருங்கவீடியோவை பார்த்தீங்களா.. கனிமொழி படிச்சு படிச்சு சொன்னாங்களே? ஸ்டாலினும் விடலையே! ப்ச் இப்ப பாருங்க

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. 2014ல் 7 மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாஜக இன்றைய தினம் 18 மாநிலங்களில் வெற்றி பெற்று உலகிலேயே பெரிய கட்சியாக பாஜக உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தாலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மக்களுக்கு என்ன தேவை என்பதை மத்தியில் இருந்து பெற்று கொடுத்து வருகிறார்.

மோடி ஆட்சி

மோடி ஆட்சி

கிட்டத்தட்ட நூறு நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கியிருக்க கூடிய ஒரு நாடாக இந்தியாவை தலை நிமிர செய்திருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஏழ்மை நிலை 22 சதவீதமாக இருந்தது. பாஜக ஆட்சியில் ஏழ்மையின் நிலை 10 சதவீதமாக குறைந்துள்ளது. தனிநபர் வருமானம் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நபருக்கு வருடத்திற்கு இருபத்தி ஒன்பது ஆயிரமாக இருந்தது தற்போதைய பாஜக ஆட்சியில் 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியின் மூலமாக நமது நாட்டிற்கு பல லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இது பல பண முதலைகளின் கருப்பு பணத்தை இன்று புறம் தள்ளியுள்ளது. ரயில்வே துறையில் மிகச் சிறந்த கட்டமைப்பில் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது.

பெண்கள் பாஜக

பெண்கள் பாஜக


முஸ்லிம் பெண்களுக்கு பாரதிய ஜனதா கட்சி செய்திருக்கும் மிகப்பெரிய பங்கு.
முத்தலாக் தடை சட்டம். இந்த சட்டத்தின் மூலமாக முஸ்லிம் பெண்கள் மிகுந்த உரிமையையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒவ்வொரு அமைச்சர்களும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கின்றனர். திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது.

கனிமொழி அட்டாக்

கனிமொழி அட்டாக்

திமுகவால் டாஸ்மாக்கை இன்னும் மூட முடியவில்லை அதிமுக ஆட்சி நடக்கும்போது கனிமொழி எம்பி மது பழக்கத்தினால் பல பெண்கள் விதவையாகி விட்டனர் என்று கூறினார் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக்கை தடை செய்வதாகவும் கூறினார். ஆனால் இன்று டாஸ்மாக்கை திறந்து அதற்கு போலீஸ் காவல் போட்டுள்ளது திமுக ஆட்சி தான். திமுகவினர் தற்போது திருட்டு மணல் அள்ள துவங்கியுள்ளனர் .அதிமுகவை குறை சொன்னவர்கள் தற்போது குவாரியை திறந்து திருட்டுத்தனமாக மணல் அள்ள தொடங்கியுள்ளனர் என்றார். தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவிற்கு சிறந்த எதிர்க்கட்சியாக திகழ்ந்து கொண்டிருப்பது பாஜகதான் என்று சசிகலா புஷ்பா குறிப்பிட்டார்.

English summary
BJP Sasikala Pushpa questions about Kanimozhi no tasmac promise in her press meet. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா திமுக எம்பி கனிமொழி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X