“அடித்து பழகிகோங்க..” காவலர்களின் கோர முகம்! சாத்தான்குளம் வழக்கில் தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் கொரோனா தொற்று காலத்தில், விதிகளை மீறியதாக காவல்துறையால் அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில், தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் 9 காவலர்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து இன்று அவர்களுக்கான தண்டனை விவரம் வெளியாக வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், ஏப்.8ம் தேதிக்கு தண்டனை விவரம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறை தாக்குதலால்தான், தந்தையும், மகனும் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று விசாரணையில் உறுதியானது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரம் வெளியாகிறது.

வழக்கின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்திருக்கின்றனர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனால், இந்த விதிகளை மீறியதாக கைது செய்திருந்தனர். இந்த கைது நடவடிக்கையின்போது, காவல்துறையினரை திட்டிவிட்டு, அவர்கள் தாங்களாகவே தரையில் புரண்டனர். இதன் காரணமாக அவர்களுக்கு ஊமை காயம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது.
ஆனால், கிளை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வழக்கு விசாரணையில், தந்தையும் மகனும் நமக்கு சிக்கியிருக்கிறார்கள் அடித்து பழகிக்கொள்ளுங்கள் என்று காவல்துறையினர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, சாமதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவலர் பால்துரை மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் மீதமுள்ள அனைவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகளின் சொத்து மதிப்பு, மனநிலை குறித்து மத்திய மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஏப்.8ம் தேதிக்கு தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!











Click it and Unblock the Notifications