சாத்தான்குளம் வழக்கு.. பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தொடர்பில்லை.. 5 தன்னார்வளர்களிடம் சிபிசிஐடி விசாரணை!
தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் சந்தேகத்திற்குரிய 5 தன்னார்வளர்கள் மீது சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
சாத்தான்குளம் வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதில் சிபிசிஐடி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் எஸ்ஐ ராகுகணேஷ், முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி மூலம் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்டு வந்த குற்றவாளியான காவலர் முத்துராஜ் தற்போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று என்ன
இந்த நிலையில் சாத்தான்குளம் வழக்கில் சந்தேகத்திற்குரிய 5 தன்னார்வளர்கள் மீது சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த 5 பேரும் தந்தை - மகன் சித்திரவதையில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் சிபிசிஐடி போலீஸ் சந்தேகம் கொண்டுள்ளது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள் எழுந்தது. பலர் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தனர். தனியார் அமைப்புகள் சிலவற்றுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

என்ன சந்தேகம்
இந்த நிலையில் தற்போது சந்தேகத்திற்குரிய 5 தன்னார்வளர்கள் மீது சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதில் இரண்டு பேர் பேசிய ஆடியோ ஒன்றும் இணையத்தில் கசிந்தது. இந்த ஆடியோ குறித்தும் தற்போது சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த 5 பேர் யார் என்று விவரம் வெளியாகவில்லை. அதேபோல் இவர்கள் எந்த அமைப்பில் வேலை பார்க்கிறார்கள் என்பது குறித்தும் விவரம் வெளியாகவில்லை.

வழக்கு விசாரணை
அதேபோல் இன்னொரு பக்கம் இந்த வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அவர்களை சாத்தான்குளம் சம்பவத்தின் போது போலீசுக்கு உதவி செய்யவில்லை. சாத்தான்குளம் துணை சரகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் யாரும் வேலை செய்யவில்லை என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

தொடர்பு இல்லை
முன்னதாக சாத்தான்குளம் வழக்கில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குறித்து புகார் வைக்கப்பட்டது. இதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று பலர் சந்தேகம் எழுப்பி இருந்தனர். சில அரசியல்வாதிகள் கூட இது தொடர்பாக கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி இருந்தனர். இந்தநிலையில் இந்த கேள்விகளுக்கும் தற்போது சிபிசிஐடி மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications