சாத்தான்குளம் மரணம்.. 1 மணி நேரம் கேள்வி கேட்ட நீதிபதி.. 3 காவலர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்!
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 3 காவலர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரண வழக்கு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிபிசிஐடி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. நேற்று எஸ்ஐ ராகுகணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

தீவிர விசாரணை
இந்த வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வந்தது.நேற்று அதிரடியாக இந்த வழக்கில் எப்ஐஆர் மாற்றப்பட்டது. கஸ்டடி மரணம் என்பதை சிபிசிஐடி கொலை வழக்காக பதிவு செய்தது. அதோடு நேற்று இரவே இந்த வழக்கில் எஸ்ஐ ரவிகணேஷ் கைது செய்யப்பட்டார். இவரிடம் சிபிசிஐடி தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். நேற்று இரவே தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் ஆஜர்படுத்தப்பட்டு அன்று இரவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மூன்று போலீசார்
இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து அடுத்தடுத்து மூன்று போலீசார் இதில் கைது செய்யப்பட்டனர். முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் சிபிசிஐடி மூலம் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். இன்று காலையில் இருந்து இவர்களிடம் சிபிசிஐடி விசாரணை செய்தது. மொத்தம் 18 மணி நேரம் சிபிசிஐடி இவர்களை விசாரணை செய்தனர்.

மருத்துவ சோதனை
இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் முன் இவர்கள் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு இருந்தது என்பதால் போலீசார் அங்கே குவிக்கப்பட்டு இருந்தனர். நீதிபதி ஹேமா இவர்கள் மூவரிடமும் விசாரணை நடத்தினார்.இந்த மூன்று போலீஸாரிடமும் நீதிபதி ஹேமா பல கேள்விகளை கேட்டார்.

வழக்கமான கேள்விகள்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கேள்விகளை கேட்டார். நீதிமன்ற காவலுக்கு முன் கேட்கப்படும் வழக்கமான கேள்விகள் கேட்கப்பட்டது. முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், முன்னாள் துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. இவர்களுக்கு ஜூலை 16ம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பேரூராணி சிறைச்சாலையில் இவர்கள் மூவரும் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்
-
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications