உதட்டிலும் உடம்பிலும் வெறி கொண்டு கடிச்சு வச்சுருக்கான்.. கதறி அழும் சாத்தான்குளம் சிறுமியின் தாய்!
உதட்டிலும் உடம்பிலும் வெறி கொண்டு கடிச்சு வச்சுருக்கான்.. கதறி அழும் சாத்தான்குளம் சிறுமியின் தாய்!
தூத்துக்குடி: "அவ உதட்டுலயும், உடம்புலயும் கடிச்சு கடிச்சு வெச்சதுபோல ரத்த காயம் இருந்தது..ங்க.. நாங்க டிரம்முக்குள்ள பார்த்தோம்" என்று சாத்தான்குளம் சிறுமி மரணம் குறித்து அவரது அம்மா கதறி கண்ணீருடன் தெரிவித்துள்ளது பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.. கிட்டத்தட்ட 42 நிமிடங்களுக்கு சிறுமி உயிர் டிரம்முக்குள்ளேயே துடிதுடித்து கொண்டிருந்திருக்கிறது என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
சாத்தான்குளம் அருகே உள்ளது கல்விளை என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கொலையில் பகீர் திருப்பங்கள் ஏற்பட்டபடியே உள்ளன.
ரொம்பவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்தான் அந்த சிறுமி.. வீட்டில் கரண்ட் கூட இல்லையாம். அதனால்தான், அதே தெருவில் உள்ள முத்தீஸ்வரன் டிவி பார்க்க அடிக்கடி சென்றுள்ளார்.

சிறுமி
காலேஜ் படித்து வரும் முத்தீஸ்வரனுக்கு சிறுமி வீட்டுக்கு வருவது விரும்பவில்லை.. சம்பவத்தன்றுகூட சிறுமி டிவி பார்க்க வீட்டுக்கு வருவதால் இவர்கள் எரிச்சல் ஆகி இருக்கிறார்.. சிறுமியை டிவி பார்க்க கூடாது என்று தன் வீட்டை விட்டு துரத்தி உள்ளார்.. இதனால் கோபமடைந்த சிறுமி, கல்லை எடுத்து அவர் மீது எறிந்ததாகவும், இது கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டதால் சிறுமியை கழுத்தை நெரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நண்பர்
அதற்கு பிறகு தான் சிறுமியை, டிரம்மில் போட்டு, பாலத்துக்கு அடியில் கொண்டு வந்து போடுவதற்கு நண்பர் நித்தீஸ்வரர் உதவியுள்ளார் என்று முதல்கட்டமாக கூறப்பட்டதுடன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் உறுதியாக தெரியும் என்றும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

பலாத்காரம்
இந்த நிலையில், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது. அதில், சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை.. கழுத்தை நெரித்து கொல்லவும்தான் இறந்தாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. முத்தீஸ்வரன் கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளிவிடவும், சிறுமி மயங்கி விழுந்துவிட்டாள்.. ஆனால், அவள் அப்போது இறக்கவில்லை.. மயங்கி கிடந்த சிறுமியைதான் டிரம்மில் போட்டு கொண்டு, 2 கிமீ தொலைவில் உள்ள ஓடைப்பாலத்தில் வைத்து விட்டு போயிருக்கிறார்கள்.

42 நிமிடங்கள்
கிட்டத்தட்ட 42 நிமிடங்களுக்கு சிறுமி உயிர் டிரம்முக்குள்ளேயே துடிதுடித்து கொண்டிருந்திருக்கிறது.. அதற்கு பிறகுதான் உயிர் பிரிந்துள்ளது. இதனிடையே, சிறுமியின் உடம்பெல்லாம் பற்கள் பதிந்துள்ளதாம்.. கடித்து கடித்து வைக்கப்பட்டிருந்ததாக அவரது தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.. டிரம்மில் அவளது சடலத்தை பார்த்தப்போ, உதட்டிலும், உடம்புலயும் கடித்து வைத்தற்கான காயம் இருந்துச்சு.. தலையிலும் ரத்தக்காயம் இருந்தது..ங்க" என்று பதறி கூறுகிறார்.

மோதல்
முத்தீஸ்வரன் கைகளால் கழுத்தை நெரித்ததால்தான் அந்த காயம் ஏற்பட்டதாக கருதப்பட்ட நிலையில், இப்போது உடம்பெல்லாம் கடித்து வைத்தது ஏன் என்பதில் சந்தேகம் எழுகிறது. அதுமட்டுமில்லை... டிவி பார்ப்பதற்காக போய் இவ்வளவு கொலை வெறி வருமா? டிவி சேனலை மாற்றுவதில் எழுந்த மோதலில் இந்த அளவுக்கு கொடூரம் நடந்திருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது.. சிறுமியின் குடும்பத்தினர் அன்றே இது வெறும் கொலை மட்டும் இல்லை என்று அடித்து சொல்கிறார்கள்.

பலாத்காரம்?
"எங்க வீட்டு பொண்ணை வீட்டுக்குள்யே வெச்சு பலாத்காரம் செய்துவிட்டனர்.. அதற்கு பிறகுதான் கொன்று கொண்டு வந்து போட்டுள்ளனர்.. எங்க குழந்தையை கொன்ன இவன், ஏற்கனவே கஞ்சா வித்துட்டு இருந்தவன்.. போதையில்தான் இந்த அக்கிரமத்தை செய்திருக்காங்க" என்று அன்றிலிருந்து உறவினர்கள் கதறி கொண்டே உள்ளனர். இந்த சிறுமி எப்படித்தான் இறந்தார்? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications