தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்.. காத்திருப்பு பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ். இவர்கள் ஊரடங்கு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சிறிது நேரம் கூடுதலாக கடையை திறந்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

Sathankulam incident: Police Inspector Sridhar suspended

இதையடுத்து இவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸார் இவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

காவலர்கள் தாக்கியதால் இருவரும் மரணமடைந்ததாக உறவினர்கள் புகார் கூறினர். உயிரிழப்பு சம்பவத்தை எதிர்க்கட்சிகளும் கண்டித்து வருகின்றனர். இந்த இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினர்.

அப்போது சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்பு பட்டியலிலும் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பட்டினி கிடந்தாலும் கிடப்போம்.. சீன முதலீட்டில் சம்பளம் வாங்க மாட்டோம்..ஜொமாட்டோ ஊழியர்கள் போராட்டம்பட்டினி கிடந்தாலும் கிடப்போம்.. சீன முதலீட்டில் சம்பளம் வாங்க மாட்டோம்..ஜொமாட்டோ ஊழியர்கள் போராட்டம்

இந்த நிலையில் வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெர்னாட் சேவியரை சாத்தான்குளம் காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக நியமித்து நெல்லை சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிமன்யு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    சாத்தான்குளம் விவகாரத்தில் SURYA ஆவேச அறிக்கை

    English summary
    Sathankulam incident: Police Inspector Sridhar suspended and new inspector appointed for the station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X