பட்டியல் பெண் சமைத்து சாப்பிடுவதா.. பிள்ளைகளிடம் விஷத்தை பரப்பிய பெற்றோர்.. சமையல் பெண் வேதனை
தூத்துக்குடி: சாதி பார்க்குறாங்க; பிள்ளைங்கள அவங்க பெற்றோர்களே சாப்பிட விட மாட்றாங்க' என தூத்துக்குடி மாவட்டம் உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமைக்கும் முனிய செல்வி வேதனை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உசிலம்பட்டி என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு முனிய செல்வி என்ற பெண் சமைக்கிறார். இவர் பட்டியல் இனத்தை சேர்ந்த பெண் ஆவார்.

இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள், எஸ்சி பெண் சமைத்து சாப்பிடுவதா என்று கூறி சாப்பிடவிட மறுத்துள்ளார்கள். 11 மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சாப்பிடவிட மறுத்த புகாரின் பேரில் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதனிடையே சமையலர் முனிய செல்வி பிரபல தமிழ் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், என் பெயர் முனிய செல்வி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வேலை பார்க்கிறேன். என்னுடைய பையன் இங்குதான் படிக்கிறான். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் என்னை தேர்வு செய்தார்கள். தகுதியின் அடிப்படையில் தான் என்னை வேலைக்கு சேர்த்தார்கள்.
அப்படியிருக்கையில் கடந்த 25ம் தேதி நான் வேலையில் சேர்ந்தேன். அப்போது இருந்து இன்று வரை இரண்டு பிள்ளைகள் தான் சாப்பிடுகிறார்கள். 11 பிள்ளைங்க இங்க இருக்காங்க.. ஆனால் சாப்பிடுவது இல்லை.. ஏன் என்று கேட்ட போது, ஏற்கனவே இந்த ஊரில் பிரச்சனை ஏற்பட்டது. உடனே ஊரில் இருந்த பெரியவர்கள் என்னிடம் பேசினார்கள்..நீ, பிள்ளைகளை சாப்பிட வற்புறுத்தக்கூடாது.. பிள்ளைகள் சாப்பிடாது. தேவையில்லாத பிரச்சனை செய்ய கூடாது என்றார்கள்.
நான் சைலண்டாக இருந்து கொண்டேன்.. ஆனால் இடையிலேயே பிரச்சனை வந்தது.. நான் சமையல் செய்யும் போதே பிரச்சனை வந்தது.காலையில் வந்து நான் பருப்பை அலசுவேன்.. பருப்பு தண்ணீரை கூட கொட்டக்கூடாது என்று சொல்கிறார்கள்.. சாதி பார்த்து இப்படி நடந்து கொள்கிறார்கள்.. என் மனசு அன்றே உடைந்துவிட்டது. நான் அதையும் விட்டுட்டேன்.. வியாழக்கிழமை என்று என் பையன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.. ஒரு பையன் சாப்பிட ஆசைப்பட்டான்.. ஆனால் பெற்றோர் தடுக்குறாங்க.. சாதி பார்த்துக்கொண்டு சாப்பிட விடமாட்றாங்க " என வேதனையுடன் முனிய செல்வி தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications