விஜய் ஒரு தூயசக்தி.. ஜனநாயகன் படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்க மாட்டார்.. கொந்தளித்த சீமான்!
தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சியை பார்த்தே தவெக தலைவர் விஜய் கட்சி நடத்தி வருவதாக சீமான் விமர்சித்துள்ளார். தவெக கொடியை கூட சிவப்பு, மஞ்சள் நிறங்களில் விஜய் வடிவமைத்துள்ளதாக கூறிய சீமான், தவெக தூயசக்தி என்பதால் ஜனநாயகன் படத்திற்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை நடக்காதா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 2 பொதுக்கூட்டங்கள், கிறிஸ்துமஸ் விழா, நிர்வாகிகள் நியமனம் என்று தொடர்ந்து அரசியல் பணிகளை ஈடுபட்டு வருகிறார். விஜய்யின் இந்த தீவிரம், நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.

விஜய் கட்சி தொடங்கிய காலம் முதலே சீமானின் வாக்கு வங்கிக்கு ஆபத்து என்று பேசப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலில் 8 சதவிகித வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, சட்டசபைத் தேர்தலில் விஜய்யுடன் அதிக வாக்குகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்கேற்ப நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறது.
ஏற்கனவே பல்வேறு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட சீமான், விரைவில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து அவர்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த நாதக பொதுக்கூட்டத்தில் சீமான் பேசுகையில், நம் எச்சியில் இருந்து தான் இங்கு பல பேர் கட்சி நடத்திக் கொண்டு இருக்கிறான்.
பிறப்பொக்கும் என்று முதலில் சொன்னது நாம் தமிழர் கட்சிதான். கொடியை கூட வேறு வண்ணத்தில் வடிவமைக்க முடியலை.. அதே சிவப்பு மஞ்சள் தான்.. இது தூயசக்தி.. இதனால் ஜனநாயகன் படத்திற்கு பிளாக் டிக்கெட் விற்கப் படாது.. தூயசக்தி என்பதால், சரியான விலையிலேயே டிக்கெட் விற்பனை செய்யப்படும். இதுவொரு கொடுமை..
வீரர்களின் வரலாற்றை படித்து அவர்கள் பின் போங்க.. நடிகனின் பின்னால் செல்லாதீர்கள் என்று பழனிபாபா கூறியதாக தெரிவித்தார். மேலும், சீமானின் கொடியில் மஞ்சள் சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய நிறங்கள் இருந்தன. விஜய்யின் வருகைக்கு முன்பாக கருப்பு நிற வெளிப்படையாக தெரியும். ஆனால் விஜய்யின் வருகைக்கு பின் நாதக கொடியில் இருந்து கருப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications