"காரை நோக்கி வந்த மர்ம கும்பல்".. என்னை கொல்ல சதி நடக்கிறது.. குண்டை தூக்கி போடும் கடம்பூர் ராஜூ!
கோவில்பட்டி: தன்னை கொல்ல சதி நடக்கிறது என்று கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக 3-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இரண்டு முறை இங்கு வெற்றிபெற்றவர் ஹாட் டிரிக் அடிக்கும் திட்டத்தில் தற்போது இருக்கிறார்.
இன்னொரு பக்கம் கடம்பூர் ராஜூவிற்கு எதிராக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் களமிறங்கி உள்ளார். இங்கு இரண்டு முறை அதிமுக வெற்றிபெற்று இருந்தாலும் இது கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருக்கும் தொகுதியாகும்.

திமுக
இங்கு திமுக கூட்டணி சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் இவர்கள் மூவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ பிரச்சாரம் முடித்துவிட்டு திரும்பும் போது அவரை சிலர் தாக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகின. கடம்பூர் ராஜூ காரை நோக்கி சிலர் வந்துள்ளனர்.

பட்டாசு
காரை பார்த்து தீபாவளி பட்டாசுகளை வீசி உள்ளனர். ஆனால் டிரைவர் சுதாரித்ததால் இந்த பட்டாசுகள் காரில் விழுந்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தன்னை கொல்ல சதி நடக்கிறது என்று கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். இவர் அளித்த பேட்டியில் கோவில்பட்டியில் திமுக அதிமுக இடையில்தான் போட்டி. இங்கு வேறு யாருக்கும் மக்கள் ஆதரவு இல்லை.

அதிமுக
இங்கு இந்த முறை திமுகவும் போட்டியிடவில்லை. திமுக கூட்டணியின் சிபிஎம்தான் போட்டியிடுகிறது. அதனால் மீண்டும் இங்கு நான் வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. இந்த தொகுதிக்காக நான் நிறைய செய்து இருக்கிறேன்.

திட்டங்கள்
10 ஆண்டுகளில் நிறைய நலத்திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறேன். மக்களுக்காக உழைத்து இருக்கிறேன். மக்கள் எனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சிலருக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் என்னை கொல்ல சதி நடக்கிறது. என் காரை தாக்க சிலர் முயற்சி செய்தனர்.

வெற்றி
நான் வெற்றிபெற்றுவிடுவேன் என்று உறுதியாகிவிட்டது. இதனால் தோல்விக்கு அஞ்சி என்னை கொல்ல திட்டங்களை வகுக்கிறார்கள். நான் இதை எல்லாம் பார்த்து அஞ்ச மாட்டேன், என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார் .
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications