குலசை தசராவுக்கு சிறப்பு ரயில்.. விரைவில் அறிவிப்பு வரும்: பக்தர்களுக்கு ‘செம’ நியூஸ் சொன்ன கலெக்டர்
தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா தொடங்கவுள்ள நிலையில், சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், தெற்கு ரயில்வே விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ளது முத்தாரம்மன் கோவில். இங்கு நடக்கும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த குலசை தசரா விழாவில் கலந்து கொண்டு, வேண்டுதல் செய்வதும், நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கம். இந்த ஆண்டும் தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

வழக்கமாக நவராத்திரி காலத்தில் வட இந்தியாவில் தான் தசரா பண்டிகை, நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் நடைபெறும். தமிழகத்தில் விஜயதசமி என்ற பெயரிலேயே கொண்டாடப்படும். தமிழகத்தில் தசரா பண்டிகை கொண்டாடப்படும் ஒரே கோவில் குலசேகரப்பட்டினம் தான். நவராத்திரி துவங்கியது முதல் 11 நாள் திருவிழாவாக தசரா பண்டிகை கொண்டாடப்படும்.
இந்த திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற காளி, அம்மன், சிவன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்து வருவார்கள். இதற்காக 41 நாட்கள் விரதமிருந்து, சுவாமிகளைப் போல் வேடமணிந்து வந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். இந்த திருவிழாவின் போது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா அக்டோபர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பத்தாவது நாளான அக்டோபர் 24ஆம் தேதி இரவு மகிசாசூரசம்காரம் செய்தல் நிகழ்ச்சி நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கப்பட்டு விட்டன. பக்தர்களின் பாதுகாப்பிற்கான தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தசரா திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தசரா விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, பாதுகாப்பு, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சிறப்பாகச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டை விட அதிகமான தற்காலிக கழிப்பறைகளை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரம் தடையின்றி கிடைக்க தனியாக மின் மாற்றி அமைக்கவும், செல்போன் நெட்வொர்க் தடையின்றி கிடைக்க தற்காலிக டவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தசரா விழா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், குலசேகரபட்டினம் தசரா திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு சுமார் 250 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 150 பேருந்துகள் தான் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு கூடுதலாக 100 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வேவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர்களும் இயக்குவதாக உறுதியளித்துள்ளனர். இது தொடர்பாக தென்னக ரயில்வே சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications