Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெய்லர் கடைக்காரருக்கு கத்திக்குத்து.. இருவர் கைது.. விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் டெய்லர் கடையில் வேலை செய்யும் வாலிபர் கத்தியால் குத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் விசாரணையில் இருவரை கைது செய்தனர்.

தூத்துக்குடியில் சிவன் கோவில் அருகே உள்ள தையல் கடையில் உதயகுமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உதயகுமார் தையல் கடையில் இருந்தபோது அவரை இருநபர் வெளியே அழைத்து வந்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் கத்தியால் உதயகுமாரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடினர்.‌ இந்த சம்பவம் தொடர்பாக இன்று சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம்

சம்பவம்

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி
மத்திய உதவி ஆய்வாளர் முருகபெருமாள் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி


இதில் தூத்துக்குடி சக்திவிநாயகபுரம் பகுதியை சேர்ந்த முத்துராமன் (28) மற்றும் அவரது நண்பர் தூத்துக்குடி முனியசாமி தெருவைச் சேர்ந்த ராம்குமார்
ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் உதயகுமார் தங்கை முத்துராமன் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகிறார்.

காதலுக்கு கடும் எதிர்ப்பு

காதலுக்கு கடும் எதிர்ப்பு

இந்த நிலையில் காதலுக்கு உதயகுமாரின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் முத்துக்குமார் வீட்டுக்கு "உங்கள் மகன் எனது மகளுடன் பழக கூடாது. மீறி நடந்தால் போலீசாரிடம் புகார் கொடுத்து சிறையில் அடைத்து விடுவேன்" என மிரட்டியுள்ளதாக தெரிகிறது.

தங்கை பேசவில்லை

தங்கை பேசவில்லை

இதை அடுத்து உதயகுமார் தங்கை கடந்த ஒரு வாரமாக முத்துராமனிடம் பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முத்துராமன் நேற்று இரவு உதயகுமார் மற்றும் அவரது தங்கை வேலை செய்யும் டெய்லர் கடைக்கு நேரடியாக சென்று உதயகுமாரை கடையில் இருந்து வெளியே அழைத்து வந்தார்.

மிரட்டல்

மிரட்டல்

பின்னர் அவரிடம் முத்துராமன், "உனது தங்கையை என்னிடம் பேச சொல்" என மிரட்டினாராம். ஆனால் உதயகுமாரோ "என் தங்கையை உனக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாது அதனால் நீ வேறு இடத்தில் திருமணம் செய்து கொள்" என கூறியுள்ளார். அப்போது முத்துராமன், "உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து கொடுக்காவிட்டால் உன் தங்கையை கொலை செய்து விடுவேன்" என மிரட்டியுள்ளார்.

கத்திக்குத்து

கத்திக்குத்து

இதற்கு உதயகுமார் என் தங்கையை நீ கொலை செய்தால் உன்னை நான் கொலை செய்து விடுவேன் என கூறியுள்ளார. இப்படியாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துராமன் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதயகுமாரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+