இனி சென்னை மட்டுமல்ல.. அடித்து தூக்கும் தென் மண்டலம்.. ராட்சச வளர்ச்சி அடையும் தூத்துக்குடி, நெல்லை
சென்னை: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியைத் தாண்டி, தென் தமிழகத்தில் மேலும் பல முதலீட்டு மையங்கள் உருவாகி வருகின்றன.
- தமிழ்நாடு அரசின் 'TN Rising' மண்டல முதலீட்டாளர்கள் மாநாடு தூத்துக்குடியில் திங்கட்கிழமை தொடங்கியது.
- இந்த மாநாடு மின்னணு உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
- இதன் மூலம் தென் தமிழகத்தில் அதிக அளவிலான முதலீடுகள் குவியத் தொடங்கியுள்ளன.
- முன்பு சென்னைக்கு மட்டுமே முதலீடுகள் குவிகின்றன என்ற விமர்சனங்கள் இருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக கொங்கு மண்டலம் மற்றும் தென் மண்டலத்திலும் முதலீடுகள் பரவலாக்கப்படுகின்றன.

தூத்துக்குடி முதலீடு
தூத்துக்குடி துறைமுகம், ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அலகுகளை அமைக்க நிறுவனங்களுக்கு பெரிய ஈர்ப்பாக உள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நுட்பமான மின்னணு உற்பத்தி நிறுவனமான யீமாக், அதன் குழும நிறுவனமான ஜீனுவ்ஸ் உடன் இணைந்து, தூத்துக்குடியில் ₹3,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அச்சுப் பலகைகள் (PCBs) மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்ய இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.
தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது.
ACME - 52,000 கோடி
பெட்ரோனாஸ் - 34,000 கோடி
செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள்
லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள்
என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது.
இந்த பெரிய உற்பத்தி மையத்தின் மூலம் 7,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிகிறது. இந்த வசதி செயல்படத் தொடங்கியதும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைகள் இரண்டின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். மேலும், பாதுகாப்பு உற்பத்தித் துறையிலும் இந்நிறுவனம் ஈடுபட உள்ளது. "இந்த வசதியை ஒரு மேம்பட்ட ஒருங்கிணைந்த பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையாகப் பயன்படுத்துவதற்கான வழிகளையும் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது,.
தூத்துக்குடி - தென் மண்டலம் முதலீடு
டாடா பவர் மற்றும் விக்ரம் சோலார் போன்ற நிறுவனங்கள் தென் தமிழகத்தில் ஏற்கனவே இருப்பதால், இம்மண்டலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களையும் ஈர்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியைச் சேர்ந்த மொபியஸ் எனர்ஜி, தேனி மாவட்டத்தில் ₹1,000 கோடி மதிப்பீட்டில் புதிய சூரிய மின்கலன் மற்றும் தொகுதி உற்பத்தி வசதியை அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) திங்கட்கிழமை கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியைத் தாண்டி, தென் தமிழகத்தில் மேலும் பல முதலீட்டு மையங்கள் உருவாகி வருகின்றன. திண்டுக்கல் மற்றும் தேனியின் வேளாண் பலங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதித் துறை நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. கோவில் நகரமான மதுரை, தகவல் தொழில்நுட்ப வன்பொருள் மற்றும் மென்பொருள் மையமாக வேகமாக வளர்ந்து வருகிறது. தூத்துக்குடியைத் தொடர்ந்து, மேற்கு, மத்திய மற்றும் வடக்கு தமிழகத்திலும் மண்டல முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications