தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2023-ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்... ஓபிஎஸ் வாக்குறுதி

Google Oneindia Tamil News

ஒட்டபிடாரம்: தமிழகத்தில் குடிசைகளில் வாழும் அனைவருக்கும் வருகிற 2023-ம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். குறுக்கு சாலை பகுதியில் பேசிய அவர் 2023 ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை பகுதியே இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்றார்.

Tamilnadu becomes a huts free state by 2023, OPS Promise

நெல் உற்பத்தியில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் கிருஷிகர்மான் விருது பெற்றுள்ளது என்று பெருமிதமாக கூறினார். பெண்கள் பாதுகாப்புக்கும் சம நிலையில், வாழ வழிவகை செய்வதற்காக பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியும் வாக்கு சேகரித்தார்.

மேலும், மு.க.ஸ்டாலின் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். ஆனால் இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தெரிவித்தார். அ.தி.மு.க.வின் 47 ஆண்டுகால வரலாற்றில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்து தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள் உருப்பட்டதாக வரலாறு இல்லை என்றும் சாடினார்.

ரம்ஜான் நோன்பு மே 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது... அரசு தலைமை காஜி அறிவிப்பு ரம்ஜான் நோன்பு மே 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது... அரசு தலைமை காஜி அறிவிப்பு

முன்னதாக, திமுகவால் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று கூறிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சுனாமி, புயல், சூறாவளி வந்தால் கூட அதிமுக அரசை அசைக்க முடியாது என்றார்.

English summary
Deputy Chief Minister O. Panneerselvam Said that Tamilnadu becomes a huts free state by 2023
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X