Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வட மாநிலத்தவர் விவகாரம்! வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகியை.. கைது செய்ய டெல்லி விரைந்த தமிழ்நாடு போலீஸ்

வட மாநிலத்தவர் விவகாரத்தில் பொய்யான தகவல் பரப்பிய பிரசாந்த் உம்ராவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகப் பொய்யான தகவலைப் பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரை கைது செய்யத் தமிழ்நாடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வட மாநிலங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. கொரோனா சமயத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களும் இப்போது திரும்புகின்றனர்.

இவர்கள் தமிழ்நாட்டில் எந்தவொரு பெரிய பிரச்சினையும் எதிர்கொள்வதில்லை. வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலும் ஹோட்டல் மற்றும் கட்டிட வேலைகளிலே உள்ளனர். இந்த வேலைகளுக்குத் தமிழர்கள் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

பொய்யான தகவல்

பொய்யான தகவல்

இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே இணையத்தில் உண்மைக்குப் புறம்பான போலியான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதாவது தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அவர்களைக் குறி வைத்து தாக்குவதாகவும் சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பினர். தமிழகத்தில் உள்ள வட மாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற பொய்யான வீடியோக்களை சிலர் திட்டமிட்டுப் பரப்பினர்,

பிரசாந்த் உம்ராவ்

பிரசாந்த் உம்ராவ்

வேறு மாநிலங்களை நடந்தவை, பழைய சம்பவங்கள் இதில் பரப்பப்பட்டன. குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டதாக 100% பொய்யான தகவலைச் சிலர் பரப்பினர். குறிப்பாக பிரசாந்த் உம்ராவ் என்பவர், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, இந்த பொய்யான தகவலைப் பரப்பினார். பீகார் தொழிலாளர்கள் தாக்குதல்கள் நடந்தபோதிலும், தேஜஸ்வி யாதவ் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார் எனப் பதிவிட்டார்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

அவரது இந்த ட்வீட்டிற்கு பின்னர், இந்த விவகாரம் பேசுபொருளானது. அப்படியொரு சம்பவம் நடக்காத நிலையில், பொய்யான தகவல்களைப் பதிவிட்ட பிரசாந்த் உம்ராவ் மீது தமிழ்நாடு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பிரசாந்த் உம்ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்யும் முயற்சியும் இப்போது எடுக்கப்பட்டுள்ளது.

விரைந்த தமிழ்நாடு போலீஸ்

விரைந்த தமிழ்நாடு போலீஸ்

இதற்கிடையே இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி, "தமிழகத்தில் இறுக்கும் வட மாநில தொழிலாளர் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பிய பிரசாந்த் உம்ராவ் என்பவர் மீது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இப்போது தலைமறைவாக உள்ள பிரசாந்த் உம்ராவை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காகத் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்துள்ளனர்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+