தட்டார்மடம் : செல்வன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தில் நிலத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட செல்வன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிமுக பிரமுகர் திருமணவேல் கட்சியில் இருந

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தட்டார்மடத்தில் நிலத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட செல்வன் உடலை வாங்கமறுத்து நான்கு நாட்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செல்வன் உடலை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து செல்வன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

தூத்துக்குடி அருகே தட்டார்மடத்தில் நிலத்தகராறு காரணமாக கடந்த 17ஆம் தேதி செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே செல்வன் என்பவர் கடத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராடி வருகின்றனர். இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட இருவர் சரண் அடைந்துள்ளனர்.

Thattarmadam Selvans body Handing over to relatives

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பில் வசிக்கும் தனிஷ்லாஸ் மகன் செல்வன்,32 தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவரை கடந்த 17ஆம் தேதி மர்ம நபர்கள் காரில் கடத்தி கொலை செய்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதனால் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

அதிமுக பிரமுகர் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே செல்வனின் உடலை நீதிபதி முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். செல்வனின் மனைவிக்கு நிவாரண உதவி, அரசு வேலை வழங்க வேண்டும் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராடி வந்தனர்.

ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தி கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருமணவேல் உள்பட 2 பேர் இன்று சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதனிடையே தட்டார்மடம் கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் திருமணவேல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில் சொக்கன்குடியிருப்பில் போராட்டம் நடத்தி வந்தவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செல்வன் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை, நிவாரணம் மற்றும் பசுமை வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் உடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள செல்வனின் உடலைப் பெற்றுக்கொள்வதற்கு அவரது உறவினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இதனையடுத்து உறவினர்களிடம் செல்வன் உடல் ஒப்படைக்கப்பட்டது. இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+