தேர்தலும் நெருங்கி விட்டது... பாஜக வெற்றியையும் நெருங்கிவிட்டது… தமிழிசை சொல்கிறார்
தூத்துக்குடி: தேர்தல் நெருங்கி விட்டது போல பாஜகவின் வெற்றியும் நெருங்கிவிட்டதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், தூத்துக்குடி மக்களைத் தொகுதி அனைவராலும் கவனிப்படும் தொகுதியாக மாறியுள்ளது. அங்கு, திமுக மகளியரணி செயலாளர் கனிமொழியும், பாஜக மாநில தலைவர் தமிழிசையும் மோதுகின்றனர்.

இந்தநிலையில், தூத்துக்குடி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை, புல்லாவழி பகுதியில் உப்பளத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். உப்பளத்துக்கு சென்ற அவர், கூடையில் உப்பு அள்ளினார், தொழிலாளர்களுக்கு சுமைகளை தூக்க உதவி புரிந்தார். அங்குள்ள களநிலவர பிரச்சினைகளை தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். உப்பை அள்ளி பரிசோதித்தார்.
பின்னர், மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் போல உப்பளத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம், தினக் கூலி உயர்வு போன்றவற்றை வழங்க வழிவகை செய்யப்படும் எனவும் உறுதியளித்தார். நேரடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட, தமிழிசைக்கு உப்பளத் தொழிலாளர்கள் உப்பு பாக்கெட்டுகளை பரிசாக வழங்கினார்.
உப்பளத் தொழிலாளர்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டிருந்த தமிழிசை தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி தருவதாக தெரிவித்துள்ளார். உப்பளத்தை தொடர்ந்து, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தமிழிசை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.












Click it and Unblock the Notifications