Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இந்தியில் மட்டுமே பேசிய ஊழியர்.. பெரிய சம்பவம் செய்த பயணிகள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் தரும் ஊழியர் இந்தியில் மட்டுமே பேசியதால் பயணிகள் அவதி அடைந்தார்கள். இதனை அங்கிருந்த பயணிகள் சிலர் வீடியோ எடுத்த சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.இது பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.

தமிழகத்தின் முக்கியமான ரயில்களின் பட்டியலை எடுத்தால் அதில் கோவில்பட்டி ரயில் நிலையம் நிச்சயம் இடம் பெறும். காரணம் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் முக்கியமான இடமாக கோவில்பட்டி இருக்கிறது. தென்மாவட்ட ரயில்கள் பெரும்பாலும் கோவில்பட்டியில் நின்றுதான் செல்லும். வந்தே பாரத் உள்பட ஒரு சில ரயில்கள் மட்டுமே நிற்காது. தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய ரயில் நிலையமாகவும், தூத்துக்குடி மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையமாகவும் கோவில்பட்டி ரயில் நிலையம் இருக்கிறது.

The employee spoke only in Hindi at the ticket counter at Kovilpatti railway station in Thoothukudi


பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரயில் நிலையம் 30 கோடி வருமானத்தினை ஈட்டி வருகிறது. ஏ கிரேட் ரயில் நிலையமான இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் மட்டுமே பெரும்பாலும் செயல்பாட்டில் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகிறார்கள். இது நீண்டகாலமாக உள்ள புகார்..

இது ஒருபுறம் எனில் நேற்று கோவில்பட்டி ரயில் நிலைய தட்கல் டிக்கெட் கவுண்டரில் இந்தியில் மட்டுமே டிக்கெட் தரும் ஊழியர் பேசியதால் பயணிகள் அவதி அடைந்தார்கள். வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர் தட்கல் கவுண்டரில் இருந்திருக்கிறார்.. அவருக்கு தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியவில்லை. ஹிந்தி மட்டும் தெரிந்து இருந்ததால் தட்கல் மூலமாக டிக்கெட் முன் பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்தார். ஹிந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும், இல்லை என்றால் மெதுவாகவே டிக்கெட் தருவேன் என்று அவர் கூறினாராம். இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பரிதவித்து போனார்கள்.

முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வந்தவர்களும் பெரும் சிரமம் அடைந்தனர். தட்கல் டிக்கெட் எடுக்க நீண்ட நேரம் தாமதனம் ஆனதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியரிடம வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல்நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இது குறித்து கோவில்பட்டி நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்த பாதிக்கப்பட்டவர்கள் நிலைய மேலாளர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தனர். அப்போது அங்கும் பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பயணி ஒருவர் ஆவேசத்துடன் கூறுகையில், தட்கல் கவுண்டரில் தமிழ்,ஆங்கிலம் தெரியாத நபரை பணியில் அமர்ந்திருக்கிறார்.. அவருக்கு இந்தி மட்டும் தான் தெரிகிறது.. இதுபற்றி புகார் அளித்து நாங்கள் உதவி பண்ணுங்க என்று கேட்கிறோம்... அவர்களோ தமிழ்நாட்டுக்காரன் தானே எப்படியும் போங்க என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.. எந்த வேலையும் தெரியாத ஒரு ஆளை தட்கல் கவுண்டரில் போட்டிருக்கிறார்கள் என்றார். இன்னொரு பெண் பயணி கூறுகையில், தட்கல் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தால் அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியவில்லை... ஆங்கிலமும் தெரியவில்லை.. இந்தியில் பேச வேண்டும் என்று கேட்கிறார்.. எங்களுக்கு இந்தி தெரியாது.. எனவே அங்கு தமிழ் தெரிந்த பணியாளரை உள்ளே பணியில் அமர்த்த வேண்டும்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இதே நிலைமைதான் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட அன்ரிசர்வ் டிக்கெட் வழங்கும் இடத்தில் இருந்த நபருக்கு தமிழ் தெரியாததால் அங்கிருந்த மக்கள் டிக்கெட்டை எடுப்பதற்கு அதிகமான நேரம் ஆனதால் அந்தோதியா ரயில் ஐந்து நிமிடங்கள் கழித்து புறப்பட்டு சென்றது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+