தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சீறிய" சின்னபுள்ள.. சிக்கிய பெண் போலீஸ்.. "இங்கிலீஷ் தெரியாதா.. கார்ல போனாலுமா".. செம்ம..!

திருச்செந்தூர் பெண் போலீசிடம் சிறுமி வாக்குவாதம் செய்தாள்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: "உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதா போலீஸ்? எனக்கு எங்கே கொரோனா இருக்கு?" என்று பெண் காவலரிடம் ஒரு சிறுமி வாக்குவாதம் செய்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மறுபடியும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.. அரசு பல்வேறு நடவடிக்ககளை எடுத்து வருகிறது.. கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.. அந்த வகையில், எல்லாரும் மாஸ்க் போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

ஒருவேளை மாஸ்க் போடாமல் வெளியே சென்றால், அவர்களை மடக்கி பிடிப்பது, அபராதம் போடுவது என தீவிரப்படுத்தி உள்ளனர்.. இப்போது 2வது அலை வேகமாக பரவி வருவதால் கெடுபிடிகளும் அதிகமாகி உள்ளது.

"ப்ளீஸ்.. கண்ணை மூடுங்க".. 60 வயது நபரை நம்பி ஏமாந்த பவித்ரா.. திடீர் தற்கொலை.. காரணம் என்ன தெரியுமா

கெடுபிடி

கெடுபிடி

மாஸ்க் போடாதவர்கள் முதல் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் வரை 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்செந்தூர் பகுதியிலும் போலீசார் விழிப்புணர்வுடன் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.. அப்போது, பைக்கல் செல்பவர்களுக்கு மட்டுமல்ல, காரில் போகிறவர்கள் மாஸ்க் போடவில்லை என்றாலும் ஃபைன் போடுகிறார்களாம்.. 200 ரூபாய் அபராதம் அப்போதே விதிக்கப்படுகிறதாம்.

சிறுமி

சிறுமி

அப்படித்தான் அந்த வழியாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது.. அந்த காருக்குள் ஒரு சிறுமியும், அவரது அப்பாவும் இருந்தனர்.. திடீரென ஒரு பெண் போலீஸ் அந்த காரை மடக்கி நிறுத்தினார்.. காரில் இருந்து அப்பாவும், சிறுமியும் கீழே இறங்கி வந்தனர்.. "காருக்குள் உட்கார்ந்து கொண்டு எதுக்காக மாஸ்க் போடவில்லை" என்று கேள்வி எழுப்பி, 200 ரூபாய் ஃபைன் போட்டுள்ளார் அந்த பெண் போலீஸ்.

இங்கிலீஷ்

இங்கிலீஷ்

அதற்கு அந்த சிறுமி, "நாங்க காரில்தானே போய்ட்டு இருக்கோம்? காரில் இருக்கும்போது எதுக்கு மாஸ்க்?" என்று கேட்டார்.. ஆனால், இதை இங்கிலீஷில் கேட்டாள் சிறுமி.. அதற்கு பெண் போலீஸ் சரியாக பதில் சொல்லவில்லை போலும்.. உடனே சிறுமி, "ஏன் உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதா?" என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் போலீஸ், "காரில் போனாலும், கீழே இறங்கி நடந்தால், அடுத்தவர்களுக்கு தொற்று பரவாதா?" என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, "எனக்கு தான் கொரோனா இல்லையே, எப்படி பரவும்?" என்று பதில் கேள்வி கேட்டாள்.

வீடியோ

வீடியோ

உடனே பக்கத்தில் இருந்த அவளது அப்பா, பெரியவங்களை அப்படி எல்லாம் பேசக்கூடாது, கேள்வி கேட்க கூடாது என்று மகளை கண்டித்தார்.. 200 ரூபாய் அபராதமும் கட்டிவிட்டு, மகளை அழைத்து சென்றார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

English summary
The Girl argued with the women police for not wearing mask
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X