பெரியார் மண்ணில் இந்த நிலை.. சனாதன சக்திகளின் ஆட்டம்.. 'உஷார்'.. அரசுக்கு திருமா ‘பகீர்’ எச்சரிக்கை!
தூத்துக்குடி : பெரியார் பெயரில் உணவகம் அமைக்கக் கூடாது என்று பெரியார் மண்ணில் இந்து முன்னணியினர் அடித்து நொறுக்கும் சூழலைப் பார்த்தால் இங்கு சனாதன சக்திகள் எந்த அளவுக்கு வன்முறையை கட்டவிழ்த்து, திட்டமிட்டு இருக்கிறார்கள் என தெரியவருகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பெரியார் பெயரில் உள்ள உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் பாஜகவை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைய வேண்டும்
தூத்துக்குடியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி சேட்டையன் தொப்பு பகுதியில் அம்பேத்கர் நூலகம் ஒன்றினை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், "வருகிற 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்மொழிகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

உரிய துறையினர் சரியா செய்றாங்க
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது குறித்துப் பேசிய திருமாவளவன், உரிய துறையினர் சட்டபூர்வமான பணியை செய்து வருகிறார்கள் என்று நினைக்கிறேன். புலனாய்வுக்குப் பின்னர் தான் இது குறித்து கருத்து சொல்ல முடியும் எனத் தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வு
மேலும் பேசிய அவர், "மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக மின்சார வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நீண்ட, நெடிய விளக்கத்தை தந்திருக்கிறார். அதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்கிற உறுதியை தந்திருக்கிறார். தவிர்க்க இயலாத நிலையில் இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தரப்பில் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில் சீரமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைக்கிறது. ஜனநாயக உணர்வை மதிக்கின்ற வகையில், சனாதன சக்திக்கு இடம் கொடுக்காமல் கட்டுக்கோப்பாக கூட்டணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்." எனத் தெரிவித்தார்.

சனாதன சக்திகளின் ஆட்டம்
மேலும், பெரியார் பெயரில் உணவகம் அமைக்கக் கூடாது என்று கோவையில் இந்து முன்னணியினர் உணவகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். பெரியார் மண்ணில் இதுபோன்ற எதிர்ப்புகள் இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் இங்கு சனாதன சக்திகள் அந்த அளவுக்கு வன்முறையை கட்டவிழ்த்து, திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது போன்ற வன்முறையை தூண்டும் சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.

சங்பரிவாரை அம்பலப்படுத்தும் பயணம்
ராகுல் காந்தி நடை பயணம் நல்ல நோக்கம், நல்ல முயற்சி. மக்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கும்பலை மக்களிடத்தில் அம்பலப்படுத்துவதற்காக ஒரு அரசியல் பயணம். இந்த பயணம் கட்சி அடிப்படையில் அணுகாமல் சனாதன சக்தியிடம் இருந்து அரசியலமைப்பு சட்டத்தையும், தேசத்தையும் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும் என சுட்டி காட்டுகிறேன். இந்தப் பயணம் சனாதான சக்திகளை தனிமைப்படுத்தி ஜனநாயக சக்திகள் ஐக்கியப்படுத்த பெரும் பயனாக அமையும் என்று கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!











Click it and Unblock the Notifications