தூத்துக்குடி லோக்சபா தொகுதி: 5-வது முறையாக திமுக கொடியை பறக்க விடுவாரா கனிமொழி கருணாநிதி?
தூத்துக்குடி: திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும் சிட்டிங் எம்பியுமான கனிமொழி மீண்டும் போட்டியிடும் தொகுதி என்பதால் நட்சத்திர தொகுதி.
தூத்துக்குடி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி.

தூத்துக்குடி லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 14,48,159; ஆண்கள்- 7,08,234; பெண்கள்- 7,39,710; 3-ம் பாலினத்தவர்- 215
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
எஸ். ஆர். ஜெயதுரை(திமுக) 3,11,017
சிந்தியா பாண்டியன்(அதிமுக) 2,34,368
சுந்தர்(தேமுதிக) 61,403
சரவணன்(பாஜக) 27,013
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி(அதிமுக) 3,66,052
பி. ஜெகன்(திமுக) 2,42,050
எஸ். ஜோயல்(மதிமுக) 1,82,191
சண்முகம்(காங்கிரஸ்) 63,080
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
கனிமொழி(திமுக) 5,63,143
தமிழிசை சௌந்தரராஜன்(பாஜக) 2,15,934
எம். புவனேஷ்வரன்(அமமுக) 76,866
கிறிஸ்டண்டைன் ராஜசேகர்(நாம் தமிழர் கட்சி) 49,222
பொன் குமரன்(மக்கள் நீதி மய்யம்) 25,702
2024-ம் ஆண்டு களத்தில் நிற்பவர்கள்
கனிமொழி (திமுக)
சிவசாமி வேலுமணி (அதிமுக)
விஜயசீலன் (தமாகா- பாஜக)
ரெவினா ரூத் ஜேன் (நாம் தமிழர் கட்சி)
தூத்துக்குடி களநிலவரம் என்ன?: 6 முறை காங்கிரஸ் வென்ற தொகுதி. காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ள தொகுதி. 4 முறை திமுக வென்ற தொகுதி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி கருணாநிதி, 2019-ல் தூத்துக்குடியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். சிட்டிங் எம்பியான கனிமொழி மீண்டும் இத்தேர்தலில் களம் காண்பதால் நட்சத்திர தொகுதியாகும். அதிமுக 2 முறை மட்டுமே வென்ற தொகுதி. சென்னைக்கு அடுத்த துறைமுக நகரம் தூத்துக்குடி. சென்னை, கோவையைப் போல தொழில் நகரம். கிராமப்புறங்களை அதிகம் கொண்ட தொகுதியாகவும் விவசாயம் முதன்மையானதாகவும் இருக்கிறது. தாமிரபரணி நதி பாசனம் முக்கியம். உப்பளத் தொழிலில் குஜராத்துக்கு அடுத்தபடியாக கொடிகட்டிப் பறக்கிறது தூத்துக்குடி. சுற்றுச் சூழல் பிரச்சனைகள், கூடுதலான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை தூத்துக்குடி தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications