தூத்துக்குடியில் ஒரே பரபரப்பு.. சிமெண்ட் தொட்டிக்குள் எட்டிப்பார்த்தால் "ஆஷா".. அதுவும் 44 வயது பெண்
தூத்துக்குடி அருகே உள்ளது அய்யனடைப்பு சிவசக்தி நகர்.. இங்கு வசித்து வந்தவர் ஜெய்னும் குலாப்தீன்.. இவரது மனைவி பெயர் ஆஷா பைரோஸ்.. 44 வயதாகிறது. இவர்களது ஒரே மகன் முகமது குலாம் காதர்.. 22 வயதாகிறது.. முகமது குலாம் காதர், லேசாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்கிறார்கள்.
ஒரே மகன்: ஜெய்னும் குலாப்தீன், தூத்துக்குடி கலெக்டர் ஆபீசில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். திடீரென உடம்பு சரியில்லாமல், இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. இதனால், ஆஷாவும், மகன் காதரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்..

மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் காதர், எந்த வேலைக்கும் செல்வது கிடையாதாம்.. வீட்டிலேயே இருந்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில், திடீரென இவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது.. எனவே, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், இதை பற்றி விசாரிப்பதற்காக ஆஷாவை தேடியுள்ளனர்.. ஆனால், ஆஷாவை அவர்களால் சந்திக்கவே முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தந்தார்கள்..
துர்நாற்றம்: போலீசாரும் விரைந்து வந்து, ஆஷா வீட்டிற்குள் சென்றனர்.. அப்போதுதான், வீட்டிற்கு பின்புறத்திலிருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து, அங்கு சென்று ஆராய்ந்தனர் போலீசார்.
அப்போது, புதிதாக கட்டப்பட்ட சிமெண்ட் தொட்டி இருப்பதையும், அதற்குள் மண் கொட்டப்பட்டிருப்பதையும் பார்த்தனர்.. பிறகு, மண்களை தோண்டியெடுத்து பார்த்தபோதுதான், ஆஷாவின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. சில நாட்களுக்கு முன்பே, ஆஷா இறந்துள்ளார்.. ஆனால் இந்த தகவலை தன்னுடைய உறவினர்களும் சொல்லாமல் மறைத்துள்ளார் காதர்.
தாயின் சடலம்: அதுமட்டுமல்லாமல், ஆஷா இறந்ததுமே, 2 நபர்களை அழைத்துவந்து, வீட்டிற்கு பின்புறத்திலேயே சிறிய சிமெண்ட் தொட்டி கட்ட சொல்லி உள்ளார்.. அந்த தொட்டிக்குள் தாயின் சடலத்தை போட்டு மண்ணால் மூடியுள்ளது தெரியவந்தது.
உடனடியாக, காதரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.. கடந்த மே2ம் தேதியே ஆஷா இறந்துவிட்டாராம்.. 3 நாட்களுக்கு வீட்டிலேயே சடலத்தை வைத்திருக்கிறார். அதற்கு பிறகே 2 நபர்களை அழைத்து வந்து, சிமெண்ட் தொட்டி ஒன்றை கட்டி, அதில் சடலத்தை வைத்து, மண்ணை போட்டு மூடியதாக காதர் சொன்னார்..
விசாரணை: ஆனால், ஆஷா எப்படி இறந்தார் என்றே தெரியவில்லையாம்.. உண்மையிலேயே அவர் உடல் நலம் பாதித்து இறந்தாரா அல்லது அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றெல்லாம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. நேற்றுதான், சிமெண்ட் தொட்டியிலிருந்து ஆஷாவின் சடலம், வெளியே எடுக்கப்பட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அந்த ரிப்போர்ட் வந்தால்தான், ஆஷா இறப்புக்கு காரணம் தெரியவரும்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications