சரக்கு வாகனம் ஏற்றி ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கொலை - குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்
ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டார். கொலையாளியை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் அவர் விளாத்திக்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தூத்துக்குடி: காவல் நிலைய உதவி ஆய்வாளரை சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்து விட்டு மது போதை ஆசாமி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. கொலையாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய கொலையாளி முருகவேல் விளாத்திக்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலு. ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட சரக்கு வாகனம் ஓட்டிய முருகவேல் என்பவரை தடுத்து நிறுத்தினார்.

வழக்கமான சோதனையில், வாகனம் இயக்கி வந்த முருகவேல் குடிபோதையில் இருப்பது தெரியவர, அவரிடமிருந்து வாகனத்தைப் பறிமுதல் செய்த எஸ்.ஐ. ஓட்டுநரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
நள்ளிரவு 02.00 மணி அளவில் மற்றொரு சரக்கு வாகனத்தை இயக்கி வந்த முருகவேல், வாகனச் சோதனை செய்துகொண்டிருந்த எஸ்.ஐ.பாலு மீது ஏற்றிக் கொலை செய்து விட்டுத் தப்பியோடினார். நள்ளிரவு நடந்த கொலை சம்பவர் ஏரல் காவல் நிலைய காவலர்களை மட்டுமின்றி தமிழக காவல்துறை அதிர்வலைகளை உருவாக்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளால் காவலர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி முறப்பநாடு நாடு அருகே மணக்கரை பகுதியில் இரட்டைக்கொலை தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் சென்ற போது ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று, நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் காவலர் சுப்ரமணியன் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இப்போது உதவி ஆய்வாளரை சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்துள்ளார் போதை ஆசாமி முருகவேல். தப்பியோடிய கொலையாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளால் காவலர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
இதனிடையே காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவை கொன்ற முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தப்பியோடிய குற்றவாளி முருகவேலை பிடிக்க, 10 தனிப்படை அமைக்கப்பட்டநிலையில் குற்றவாளியே தானாக வந்து சரணடைந்துள்ளார்.
இறந்த உதவி ஆய்வாளருக்கு ஒரு ஆண், ஒரு பெண், பேச்சியம்மாள் என்ற மனைவியும் உள்ளனர். இவர் முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர். இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற காவலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications