மட்டன் பிரியாணி சாப்பிட ஆசையாய் ஓட்டலுக்கு போன நபர்! கிச்சனில் அதென்ன "தொங்குது".. தடதட தூத்துக்குடி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, மலைக்க வைத்து வருகிறது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டா.. இவர் தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில், "அனிபா பிரியாணி" என்ற ரெஸ்டாரெண்ட்டை நடத்தி வருகிறார்.. பிரியாணியின் பெயரிலேயே இந்த ஓட்டல் நடத்தப்படுவதால், இந்த ஓட்டலில் பிரதான உணவாக பிரியாணி திகழ்ந்து வருகிறது.

பிரியாணிகளின் அரசன்: அதுவும் இல்லாமல், "பிரியாணிகளின் அரசன்" என்றே தன்னுடைய ஓட்டலை விளம்பரப்படுத்தி வருகிறார் லிவிங்ஸ்டா.. எனவே, சுற்றுவட்டார மக்கள் முதல் வெளியூர்வாசிகளும் இந்த கடையில் பிரியாணி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று திடீரென, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக இந்த ஓட்டலுக்குள் சோதனை செய்தார்கள்.. நேராக கிச்சனுக்கு சென்ற அதிகாரிகள், அங்கிருந்த ஃபிரிட்ஜ்ஜை ஓபன் செய்து பார்த்தார்கள்.. அப்போது குப்பென்று நாற்றம் வீசியது..
ஃபிரிட்ஜ்: ஃபிரிட்ஜ்ஜூக்குள் நேற்று சமைத்த உணவுகள் போக, பழைய உணவுகளும் வைக்கப்பட்டிருந்தன.. அந்தவகையில், 3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், ஒன்றரை கிலோ மீன் வகைகள், 3 கிலோ சாதம், 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், இரண்டரை கிலோ பிரட் அல்வா, நூடுல்ஸ், 15 கிலோ சப்பாத்தி மாவு, 2 கிலோ அரிசி மாவு, மைதா மாவு, 3 லிட்டர் தேதி குறிப்பிடாத சோயா சாஸ் போன்றவை எல்லாமே ஒரே ஃபிரிட்ஜ்ஜூக்குள் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அரண்டு போனார்கள்.
இதைத்தொடர்ந்து அனைத்து உணவுகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், கிச்சனை முழுமையாக ஆய்வு செய்தனர்.. அப்போது கிச்சன் முழுக்க சரியாக சுத்தம் செய்யாமலும், முறையாக பராமரிப்பு இல்லாமலும், சுகாதாரமற்று இருப்பதையும் பார்த்து அதிர்ந்தனர்.. அதாவது, கிச்சனின் சுவற்றில் சிலந்தி வலைகள் தொங்கி கொண்டிருந்ததாம்..
சான்றிதழ்: அந்த ஓட்டலுக்கென்று தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கையும் இல்லை... பணியாளர்களுக்கு தொற்று நோய் தாக்கமற்றவர்கள் என்ற சான்றிதழும் இல்லை.. இருப்பு பதிவேடுகளும் இல்லை... கிச்சன் வாசற்படியிலேயே சிமெண்ட் மூட்டைகள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். அதிலிருந்து கிளம்பிய தூசுகள் கிச்சன் உணவுகளில் படிந்திருந்தன.
அதைவிட முக்கியமாக, இந்த ஓட்டலை நடத்துவதற்கு, லைசென்ஸ்கூட பெறவில்லையாம்.. உணவு பாதுகாப்பு உரிமம் அனுமதி பெறாமலேயே, ரெஸ்டாரண்ட் நடத்தியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை உரிமத்தை ரத்து செய்து, தற்காலிகமாக கடையை இயக்க தடை விதித்தனர்.
அடுத்த அறிவிப்பு: அப்படியானால், அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த பிரியாணி கடையை இயக்க முடியாது.. அதையும் மீறி நடத்தினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். பிரிட்ஜ்ஜிலிருந்து பறிமுதல் செய்த 38 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் உணவுகளை பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி குப்பைத் தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டது.
இதுவரைக்கும் ஆசை ஆசையாக இந்த கடைக்கு சென்று பிரியாணி சாப்பிடும் கஸ்டமடர்கள் எல்லாம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம்.
அறிவிப்பு: இதையடுத்து, நுகர்வோர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணுக்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என்று மாவட்ட உணவுத்துறை நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications