தூத்துக்குடியில் மகேஸ்வரியிடம் கிறங்கிய போலீஸ் ஏட்டு.. 16 வயசு பிஞ்சு நெஞ்சில் வந்த நஞ்சு.. கொடுமை
தூத்துக்குடி: தன்னுடைய அம்மா, தங்களைவிட்டு பிரிந்து சென்றதற்கு காரணமே சக்தி மகேஸ்வரிதான் என்ற முடிவுக்கு வந்துள்ளார் போலீஸ் ஏட்டுவின் மகன்.. இதற்குபிறகுதான் இப்படியான முடிவுக்கு வந்துள்ளார்.. தற்போது, 2 மைனர் சிறுவர்களையும் தாளமுத்துநகர் போலீசார் தேடி வருகின்றனர்.. என்ன நடந்தது தூத்துக்குடி மாவட்டத்தில்? யாரிந்த சிறுவர்கள்?
தூத்துக்குடி அருகே உள்ளது மாப்பிள்ளையூரணி.. இங்குள்ள திரேஸ்நகரில் ராமசுப்பு என்பவர் வசித்து வருகிறார்.. இவர் கர்நாடகாவில் செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மனைவி பெயர் சக்தி மகேசுவரி.. 38 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியிடையே பிரச்சனை நிலவி வந்தது. இதனால் தினம் தினம் சண்டைகளும், சச்சரவுகளும் அதிகமாகின..
பிரிந்து சென்ற போலீஸ்காரர் மனைவி
இதனால் ஒருகட்டத்தில் சக்தி மகேஸ்வரி தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து சென்று தனியாக வசித்து வந்தார். அப்போதுதான், சக்தி மகேஸ்வரிக்கும், தூத்துக்குடி சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் ஏட்டு ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏட்டுவுக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி, மகள், மகன் இருக்கிறார்கள். இதில் 16 வயதாகும் இளைய மகன் பிளஸ்1 படித்து வருகிறார்..
எனினும், சக்தி மகேசுவரியிடம் நெருக்கமான உறவை போலீஸ் ஏட்டு வைத்திருந்தார்.. இந்த விஷயம் ஏட்டுவின் மனைவிக்கு தெரிந்து, கணவரை கண்டித்திருக்கிறார்.. நாளடைவில் ஏட்டு தம்பதிக்குள்ளும் தகராறு வெடிக்கவும், அவரது 2 பிள்ளைகளுக்கும் தன்னுடைய அப்பாவின் கள்ள உறவு குறித்து தெரியவந்துள்ளது.
16 வயது மைனர் சிறுவர்கள்
எனினும் பிள்ளைகளை பற்றியும் யோசிக்காமல், சக்தி மகேசுவரியின் உறவில் விழுந்து கிடந்தார் போலீஸ் ஏட்டு.. இதனால் வேதனையடைந்த ஏட்டு மனைவி, கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.. இதனால் மகளும், மகனும் மட்டும் ஏட்டுவுடன் வசித்து வந்துள்ளனர்..
ஒருகட்டத்தில் தன்னுடைய வீட்டுக்கும் சரியாக வராமல், பெற்ற பிள்ளைகளையும் கவனிக்காமல், சக்திமகேசுவரியின் வீடே கதி என்று கிடந்துள்ளார் ஏட்டு..
தன்னுடைய அம்மா தங்களை பிரிந்து சென்றதற்கு காரணமே சக்திமகேசுவரி என்று போலீஸ் ஏட்டுவின் 16 வயது மகன் நினைத்தான்.. இதனால் சக்தி மகேசுவரியை கொன்றுவிட செய்ய முடிவு செய்து, தன்னுடைய சக நண்பன் 16 வயது சிறுவனுடன் சேர்ந்து சக்திமகேசுவரியின் வீட்டுக்கு நேற்றைய தினம் சென்றுள்ளார்..
ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரி
அந்த வீட்டிலிருந்த சக்தி மகேசுவரியை 2 சிறுவர்களும் சேர்ந்து அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்தனர்.இதில் ரத்தவெள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே சக்தி மகேஸ்வரி உயிரிழந்தார்... அவரது சடலத்தை கண்டபிறகுதான், 2 சிறுவர்களும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்..
இதுகுறித்து தகவலறிந்து வந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்தி மகேசுவரியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 2 சிறுவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications