தூத்துக்குடியே திணறுது.. ஓவர் நெருக்கம்.. டீச்சர் உடம்பை விட்டு போக மறுத்து அடம் பிடிக்கும் "பேய்"
தூத்துக்குடி: டீச்சர் உடம்பில் பேய் குடியேறிவிட்டதாம்.. எவ்வளவு ஜெபம் செய்தாலும் அந்த பேய், போக முடியாது என்று அடம்பிடிக்கிறதாம்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த 33 வயது பெண்.. கல்யாணமாகிவிட்டது.. 8 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.. ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார்..
இப்போது இந்த பெண் சென்னையில் வசித்து வருகிறார். பிரபலமான ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்தும் வருகிறார்... எனினும், குடும்ப சூழல், மற்றும் கணவனை விட்டு தனியாக வசிப்பது போன்ற காரணங்களினால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.. அதனால், அவர் வசிக்கும் பகுதியிலுள்ள சர்ச்களுக்கு சென்று ஜெபம் செய்து வந்துள்ளார்..

பாதிரியார்: அப்போதுதான், தனக்கு தெரிந்த பாதிரியார் ஒருவரை சந்தித்துள்ளார்.. மனஉளைச்சலை அவரிடம் பகிர்ந்துள்ளார்.. அந்த பாதிரியாரோ, தூத்துக்குடி சேர்ந்த இன்னொரு பாதிரியாரை, டீச்சருக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்.. தூத்துக்குடி பாதிரியாரின் பெயர் ஜோஸ்வா.. 39 வயதாகிறது..
இதையடுத்து, ஜோஸ்வாவுக்கு போனை போட்டு டீச்சர் பேசியிருக்கிறார்.. அப்போது தனக்கிருக்கும் மனரீதியிலான பிரச்சினைகளையும் டீச்சர் அவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இதைக்கேட்ட ஜோஸ்வா, டீச்சரை நேரில் வந்து தன்னை சந்திக்குமாறு சொன்னார்.. அதன்படியே, அந்த பெண்ணும் தூத்துக்குடிக்கு சென்று பாதிரியாரை சந்தித்து பேசியிருக்கிறார்.
ஜெபம் செய்வோம்: அப்போது ஜோஸ்வா, "உங்க உடம்பில் பயங்கர பேய் ஒன்று இருக்கிறது.. அந்த பேய் உங்கள் உடம்பைவிட்டு போகாது.. அதை விரட்டவேண்டுமானால், நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபம் செய்ய வேண்டும்" என்றார்..
இதைக்கேட்டு பயந்துபோன டீச்சர், ஜோஸ்வா சொன்னபடியே ஜெபம் செய்ய தொடங்கினார்... இப்படியே சில நாட்கள் கழிந்தன.. இப்போது ஜோஸ்வா, அந்த பேய் உங்களை விட்டு போகமுடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறது.. அதனால் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டால், அந்த பேய் ஓடிவிடும் என்றார்.
அந்த டீச்சர் இதையும் நம்பியிருக்கிறார்.. பாதிரியார் சொன்னபடியே, அவருடன் உடலுறவும் வைத்துள்ளார்.. பேயை விரட்ட வேண்டும் என்று சொல்லியே, பல முறை உறவு கொண்டிருக்கிறார்.. திருப்பி தந்துவிடுவதாக சொல்லி, பல லட்சம் ரூபாயையும் டீச்சரிடமிருந்து பெற்றுள்ளார்.. பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் டீச்சருக்கு சத்தியம் செய்து தந்துள்ளார்.. இப்படியே நாட்கள் ஓடிவிட்டன..
ஆதாரங்கள்: வாங்கிய பணத்தை தரும்படி டீச்சர் கேட்டிருக்கிறார்.. பணம் எதையுமே வாங்கவில்லையே என்று ஒரேயடியாக சொல்லிவிட்டாராம் பாதிரியார். இதனால், இருவருக்குள்ளும் தகராறு வெடிக்கவும், அந்த டீச்சர் நேரடியாக புதுக்கோட்டை போலீஸுக்கு சென்றுவிட்டார்.. பாதிரியார் மீது புகார்களை தந்தார்.. பிசினஸ் செய்ய போவதாக சொல்லி 5 லட்சம் ரூபாய் வரை பாதிரியார் பறித்துவிட்டதால், அதுகுறித்தும் புகார் தந்தார். அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்..

இதையடுதது, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.. ஆனால், அதற்குள் பாதிரியார் தலைமறைவாகிவிட்டார்.. போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜோஸ்வாவை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்களின் தனிப்பட்ட பிரச்சனைகள், பயம், கலக்கம் போன்றவற்றுடன், அவர்களது "மூட நம்பிக்கைகளையே", மூலதனமாக்கி காசு பார்த்து வருகிறது ஒரு கூட்டம்.. இது எல்லா மதத்திலுமே பாரபட்சமின்றி வியாபித்திருக்கிறது.. பலவீனமான மனித மனங்களை, மாய்ஜாலத்தாலும், இனிப்பு சொற்களாலும் இதுபோன்றவர்கள் எளிதில் வீழ்த்திவிடுகிறார்கள்.. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் நிச்சயம் இருக்கத்தானே செய்வான்?
ஆச்சரியம்: படிப்பறிவு இல்லாத பாமர மக்கள்தான் இப்படி பெரும்பாலும் ஏமாந்துவிடுவார்கள்.. ஆனால், படித்த ஒரு டீச்சரே ஏமாந்து போயிருப்பது ஆச்சரியமாக உள்ளது..!!
ஆக, பாதிரியார், தான் வாங்கிய பணத்தை டீச்சருக்கு கடைசிவரை திருப்பி தரவில்லை.. அவரை கல்யாணமும் செய்துகொள்ளவில்லை.. அந்த "பேய்" என்ன ஆனது என்றே தெரியவில்லை..!!
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications